Search
Search titles only
By:
Search titles only
By:
Log in
Register
Search
Search titles only
By:
Search titles only
By:
Menu
Install the app
Install
Forums
New posts
All threads
Latest threads
New posts
Trending threads
Trending
Search forums
What's new
New posts
New ads
New profile posts
Latest activity
Free Ads
Latest reviews
Search ads
Members
Current visitors
New profile posts
Search profile posts
Contact us
Latest ads
Ad icon
Jobreceive.com for sale
Blogerwiki
Updated:
Yesterday at 8:55 PM
Post Your Vehicle for Sale — FREE! - https://libro.lk
Kalu_Puth
Updated:
Yesterday at 7:38 PM
ඔයාගෙ Assignment හෝ Thesis එක හරියට හදාගමු
ErMurazor
Updated:
Saturday at 10:52 PM
Ad icon
BlackWall V2ray servers
hu KANNA
Updated:
Sep 23, 2026
Peppa Pig Family Plush Toy Set – 5 Characters
anil1961
Updated:
Sep 19, 2026
Electronics
Vehicles
Property
Search
Reply to thread
Forums
General
ElaKiri Talk!
கலைச்செல்வி
Get the App
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Message

பயமா.. என புரியவில்லை என்றாலும் கடந்துப் போனவைகளை விட்டு கண்ணெடுக்க முடியவில்லை. அன்று இரவு கூட என் கனவில் அந்த மயில்களைப் பார்த்தேன். அம்மா.. காட்டுமயிலு எவ்ளோ பெரிசு தெரியுமா.. என்றேன். “காட்டுக்கு போனீயாடா..” என்று பதறினார் அம்மா. ”தாத்தாவுக்கும் பேரனுக்கும் வேற பொழைப்பே கெடையாது..” அப்பா சுலபமாகக் கடந்துப் போனது தந்த சுதந்திரத்தில் எனக்கும் தாத்தாவுக்கும் வீட்டை ஏமாற்ற அதிக சிரமம் இருப்பதில்லை.

நிறைவுக் கூட நிரம்பி வழிந்து விடும் சில நேரங்களில். ஒண்டவியலாதபடி நடுக்காட்டில் பெய்ந்து விடும் பெருமழையை விட செந்தட்டியின் முட்கள் அதிகம் படுத்தி விடும். அடங்காத அரிப்பு எரிச்சலைக் கொண்டு வந்து விடுகிறது. வழித்தவறி மாட்டிக் கொண்டத் தருணமொன்று இரவு நேர தரிசனத்தையும் எனக்கு சாத்தியமாக்கியது. பொழியும் நிலவுக்குள் கோட்டோவியமாக வெளிப்படும் காடு வரை எனக்கு பழக்கம்தான். ஆனால் நள்ளிரவுக் காடுகள் சற்றே திகிலுாட்ட வைக்கின்றன.

காட்டுவாசிகளின் குடிசையில் இரவு தங்க நேரிட்டபோது நெருப்பு மூட்டத்தில் குளிரையும் பயத்தையும் ஓட்ட முயற்சி செய்தேன். மூட்டப்பட்ட தீயின் ஒளிக்குள் கானகம் முழுவதையும் திணித்துக் கொள்ளத் தோன்றியது. கீறலாகத் தெரிந்த நிலவுக் கூட இருட்டை விரட்ட அஞ்சி மேகத்திற்குள் ஒளிந்துக் கொண்டது. இரவு உணவாக அவர்கள் அளித்த எருமைப்பால் தயிறுடன் கலந்த காட்டுயானம் சோறு உள்ளே இறங்க மறுத்தது. கானகத்து இருட்டை கவ்வித்தள்ளும் முயற்சியில் இரவு முழுவதும் நெருப்புத் தேவையாக இருந்தது… அம்மனிதர்களின் அருகாமையும்தான். மலைவாழையும் ஆகாசக்கருடன் கிழங்கு மாவுமாக வழியனுப்பினார்கள். இந்த மாவு பாம்பு விஷத்தை முறித்து முடக்கி விடும் என்றார் வரும்வழியில் தாத்தா.

”நான் ஒருத்தி இருக்கேங்கிற நெனப்பெல்லாம் உங்களுக்கெங்க இருக்கப் போவுது.. காடு.. காடுன்னு.. அதையே கட்டிக்கிட்டு அழுவ வேண்டியதுதானே..? கட்டியவள் அழத் தொடங்க சமாதானப்படுத்தும்விதமாக படுத்தவாறே அவளை அணைத்து இழுத்தேன். என் கனவுகளுக்கு மதிப்பளிக்கிறாளோ இல்லையோ.. நான் தனித்திருக்கும் தருணங்களை அனுமதிக்கும் தன்மைக் கொண்டவள்தான் என் மனைவி. தங்கையைப் பற்றிய கவலை.. ஒரு வாரப் புழுக்கம்.. சிறுத்தைப்புலி விஷயத்தை நான் இத்தனை சுலபமாக எடுத்துக் கொண்டதால் ஏற்பட்ட பகிர்தலற்ற நிலை போன்றவைகள் அவளின் கோபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது.

நேற்று அந்த சிறுத்தைப்புலி பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் மேற்புறம் திறந்த குளியலறைக்குள் தஞ்சமடைய யாருக்கு வாழ்வு.. யாருக்கு சாவு என்பது விளங்காமலேயே இறுதியாக மயக்க ஊசி மூலமாக போராட்டம் முடிவுக்கு வந்தது. வனகாவலர்களும் அதிகாரிகளுமாக எடுத்திருந்த குத்தகை நேற்றோடு முடிவுக்கு வந்திருந்தாலும் இறுக்கத்தின் முனை முற்றிலும் அவிழாத நிலையில் அடைப்பட்ட வீடுகள் இன்னும் திறக்கப்பபடவில்லை. வீட்டின் வராண்டா.. மாடிப் படிக்கட்டு என எல்லாமே வலுவான இரும்பு கிராதிக்குள் அகப்பட்டுப் போனதில் குரல்கள் எதிரொலிப்பதான பிரமை எனக்கு. ஏதோ சொன்னாள் அவள். ”என்னப்பா சொன்னே..?” என்றேன்.

”எப்பப் பாத்தாலும் கனவுதான்.. அப்டி என்னாதான் வானத்துல கொட்டிக் கெடக்கோ..” என்றாள் அதே கோபத்துடன்.

இதைப் போன்றக் கேள்விதான் எனக்கும் தாத்தாவுக்குமிடையே ஊடாடிக் கொண்டிருந்தது.. ”அப்டி காட்ல என்னதான் இருக்கோ..?” பதிலாக என்னையும் தனக்குள் பிணைத்துக் கொண்டது காடு. காடுகளில் வழிந்தோடும் பால் நிலவு பித்தங்கொள்ள வைப்பதாக இருக்கும். புடைப்பாகப் பிணைந்துக் கிடக்கும் வேர்களும் மண்டிக் கிடக்கும் புதர்களும் வழிந்தோடும் நிலவைத் தாங்கித் தனக்குள் பொதித்துக் கொண்டது போல இறுமாந்து நிமிர்ந்திருக்கும். கிளைகளிலும் இலைகளுக்குள்ளும் சிறைப்பிடித்த நிலவை சில மரங்கள் சுயநல மிகுதியில் அடம்பலாக்கி தனக்குள்ளே மறைத்துக் கொள்ளும் சிறிதும் கருணையின்றி. பொழியும் பால் ஒளியை உண்டப்பின் மிகுதிகளை புதர்களுக்குக் கடத்தி அவற்றைக் கோட்டோவியங்களாக்கி விடும் சில நன்மரங்கள். வளைந்து நெளிந்தோடும் மரங்கள் நிழலும் வெள்ளொலியுமாக நிலவைத் தன்னகப்படுத்த நீண்டு நெடிந்த மரங்கள் நிலவுத் தொட்டு விடும் துாரமென்ற தொடர் நம்பிக்கையில் தனது முயற்சியைத் தொடர்ந்துக் கொண்டேயிருந்தன. விட்டக்குறையாக தன்னை தொட்டு விடும் நிலவுக்குள் புல்வெளிகள் முகம் புதைத்து பூரிக்கும். மெல்லிய சாரலும் பனியும், சலசலக்கும் இலைகளை சலனமற்று காட்ட.. மெத்தென்ற புல்வெளிகள் பூச்சிகளுக்கும் பாம்புகளுக்கும் கூட ஏதுவாகதான் இருக்கும்.

”தாத்தா.. ஏதாவது மிருகம் வந்துடுச்சுன்னா என்னா செய்வே..?” என்பேன். கேட்கும்போதே தாத்தாவின் விரல்களை அழுத்தமாக இறுக்கிக் கொள்வேன். ”அதுங்களுக்கும் நம்பள வுட்டா யாருதான் இருக்கா..?” என்பார். புரிந்ததுப் போல தலையாட்டிக் கொண்டேன். என்னவென்று கேட்க விழையும் என்னுடைய குறுக்கீடு அவரை எதனுள்ளிருந்தோ நகர்த்தி விடும் என்பதாக தோன்றுவதில் என்னால் கேட்க முடிவதில்லை. புரிந்த சில விஷயங்கள் எனது தோழர்களிடம் பெருமையடித்துக் கொள்ள போதுமானதாக இருக்கும். ஒருமுறை காட்டுவாசி அக்கா ஒருவர் புலியைப் பற்றிச் சொன்னத் தகவல்களை சொந்த சரக்காக்கி அவிழ்த்து விட அதனை நம்பாதத் தோழர்களும் இருக்கவே செய்தனர்.

”புலி பொம்பளப்புள்ளங்களாட்டம் வெக்கப்படுமாம்..” புலி பொதுவாக சாந்தமும் வெட்கப்படும் சுபாவமும் உடையது என்று நான் சொல்வதை அவர்கள் நக்கலாக எதிர்க்கொள்வார்கள். நானும் விடுவதில்லை.

”ஆமா.. வெக்கப்பட்டு குச்சுக் கட்டிக்கிட்டு ஒக்காந்துக்கும்.. சீரியஸா பேசும்போது கிண்டலடிக்காதீங்கடா..” பதிலில் கோபத்தை ஒளித்துக் கொண்டு தொடர்வேன். ”நீ பசிக்கும்போது சோறு திங்க மாதிரி அதுவும் பசிக்கும் போது சாப்டுது.. எல்லா நேரமுமா பசிக்கும்..? பசியில்லாத நேரத்துல யாரையும் எதுவும் பண்ணாது தெரியுமா.. மனுஷன்னா வயசானக் காலத்தில ஒக்கார வச்சு சோறுப் போடுவோம்.. புலிங்களுக்கு யாரு இருக்கு.. தானா தனக்கு வேணுங்கறத வேட்டையாடிக்குணும்.. முதுமை.. இயலாமை.. யாரும் நம்பளக் கண்டுக்கலையேங்கிற தனிமை உணர்வு எல்லாம் சேரும் போதுதான் அதுங்களுக்கு கோவம் வந்துடுது.. மத்தப்படி அது சாந்தமான மிருகந்தான்.. ஆனா ஒண்ணு மிருகங்கள்ல்ல நல்லது.. கெட்டது.. பழகினது.. பழகாததுன்னு எதுவுமில்ல..” என்றேன்.

“நெனப்பு.. உயிரெல்லாம் எங்கயோ இருக்கு.. உருவம் மட்டுந்தான் இங்க இருக்கு..” மனைவியின் புலம்பல் என்னை நடப்புக்குள் இழுத்தது.

”சகலைக்கிட்டே நானே பேசி வளைக்காப்புக்கு வேறொரு நாள் பாக்குறேன்.. போதுமா.. நீ கவலய வுடு..” என்றேன்.

“என்ன பேசுவீங்க.. சிறுத்தையும் புலியும் வந்தா தடியால அடிச்சு விரட்டிடுலாம்னா..? பாத்திரக்கடைதானே.. எங்க வச்சாலும் ஓடும்.. பேசாம எல்லாருமே வெளியூர்ப்பக்கம் போயீட்டா இந்த பிரச்சனையலெ்லாம் இல்லாம நிம்மதியா இருக்கலாம்ல்ல..” நக்கலா.. கிண்டலா.. கெஞ்சலா.. என்று கணிக்கவியலாதத் தொனியில் பேசினாள் என் மனைவி.

”பிரச்சனைக்குள்ளதான்டீ தீர்வும் இருக்கு.. அதான் இயற்கை.. செங்காந்தாள் பூ பாத்திருக்கில்ல.. அழகா.. செவப்பும் மஞ்சளுமா இருக்குமே.. லேடீஸ்ஃபிங்கர் பூன்னு கூட இதுக்கு பேரு வச்சிருக்கலாம்.. பாலீஷ் போட்ட நெயில் மாதிரி அத்தனை அழகு.. ஆனா அதோட கிழங்குல விஷமிருக்கு.. அதுக்காக அதை ஒதுக்கி வச்சிமின்னா நட்டம் நமக்குதான்.. அதைப் பசுமாட்டு கோமியத்துல ஊற வைச்சு அந்த நஞ்ச முறிச்சுட்டோம்னா வலிக்கெல்லாம் நல்ல மருந்துன்னு சித்த மருத்துவம் சொல்லுது..”

”போதும்.. ஆரம்பிச்சுடாதீங்க.. நீங்க நிறுத்தறத்துக்குள்ள கீழ கொழந்த எழுந்துக்குவா..” என்றாள். அப்போதுதான் பார்ப்பதுப் போல் அவளைப் பார்த்தேன். நிலவொளி அவளின் அழகைக் கூட்டியிருந்தது. துறுதுறுத்தக் கண்களுக்குள் கடந்த நாட்களின் வருத்தம் பிம்பமாக படிந்திருந்தது. ”கவலைப்படாதடீ..” என்றேன். வாஞ்சையான என் பேச்சை நம்பலாமா.. வேண்டாமா..“ என்பதுப் போல என்னைப் பார்த்துத் திருதிருவென விழித்தாள். திருமணமானப் புதிதில் காடுக் குறித்த எனது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் போதுக் கூட அப்படிதான் விழிப்பாள். பெண்பிள்ளைகளுடன் பிறந்தவனில்லை நான். பெண் தோழிகள் என்றும் யாருமில்லை. இவளைத் தோழியாகவும் வரிந்துக் கொள்ளும் என் மனதின் போக்கிற்கு முடிந்தவரை நியாயம் செய்யும் நல்ல மனைவி இவள்.

எனக்கும் என் மனைவிக்கும் ஒத்த அலைவரிசைக்குள் பயணிக்க முடிகிறதோ இல்லையோ எனக்கும் தாத்தாவுக்குமான அலைவரிசைகளில் என்றும் குறைப்பாடே இருந்ததில்லை. புதிதுபுதிதான அவரது அனுபவங்கள் என்றுமே அலுப்பதில்லை.

”ஒருநாளு நானும் எங்கூட்டாளியும் பொழுது விடியறப்பவே காட்டுக்கு வந்துட்டோம்.. அப்போ காடு எனக்கு புதுசுன்னாலும் அன்னைக்கு ரொம்ப அழகாயிருந்தாப்பல தோணுச்சு. அப்பவே காட்டுக்குள்ள சன நடமாட்டமிருந்துச்சு. அவங்கள்ளாம் இங்கயே வாழறவங்கதான்னு சொன்னான் எங்கூட்டாளி.. சும்மாட்டுத் துணிய இடுப்புல சொருவிக்கிட்டு பொம்பளையாளுங்க வெறவு வெட்ட போயிட்டுருந்தாங்க.. அவங்க போறப்பக்கம் நெறைய எலந்தமரமிருந்துச்சு.. எலந்தப்பழம் பொறுக்கலாம்ன்னு அவங்க பின்னாடியே கௌம்புனோம்..”

”அப்றம் என்னாச்சு..”

”ஒண்ணும் ஆகல. பட்டுபட்டுன்னு காஞ்சக் குச்சிங்கள ஒடைச்சு வெறவுக்காக கட்டிக்கிட்டாங்க.. எலந்தப்பழம்.. எலுமிச்சம்பழமெல்லாம் பொறுக்கி சாக்குல வச்சுக்கிட்டாங்க… வெறவுக்கட்டை தலயில ஏத்திக்கிட்டு அவங்க கௌம்ப நாங்களும் பின்னாடியே நடந்தோம். போற வழியெல்லாம் வண்ணாத்திப்பூச்சி புடிக்கறது.. மரத்துல நம்பர் போடறது.. செடியில கல்லத் துாக்கிப் வீசறது. ஓணான் அடிக்கிறதுன்னு எதாவது பண்ணிக்கிட்டேப் போனோம்.. திடீர்ன்னு ஏதோமாதிரியான சத்தம்.. காட்டுசனங்க எங்களப் பாத்து சத்தம் போடாதீங்கங்கிற மாதிர வாயில வெரல வச்சுக் காட்டுனாங்க. அப்டியே நின்னோம். எங்களுக்கு எதுவும் தோணல.. சொல்லப்போனா நிதானிக்கக் கூட நேரமில்ல.. நுாறடி துாரமிருக்கும்.. புதர் மறைவுக்குள்ள ஏதோ ஒண்ணு சடக்குன்னு ஓடி மறைஞ்சாப்பல இருந்துச்சு.. அவங்க நடக்க ஆரம்பிச்சாங்க.. மெதுவா எங்களையும் அவங்க பின்னாடியே வரச் சொன்னாங்க.. சின்னச் சின்னதா இருந்துச்சு அவங்க குடிசையெல்லாம். சின்னத்தட்டுல அவிச்சக் கிழங்க வச்சு அதுல ரசத்தை ஊத்திக் கொடுத்தாங்க.. தின்னுப்புட்டு உடனே கௌம்பச் சொன்னாங்க.. பலாப்பழம் பறிக்க போவுணும்னு சொன்னோம்.. ஆனா அவங்க காட்டுக்குள்ள போக வேணாம்னு கன்டிசனா சொன்னாங்க…”

முக்கியமாக ஏதோ சொல்லப் போகிறார் என்பதை உணர்ந்து திகிலோடு அவரைப் பார்த்தேன்.

”ஏங்க்கா..“? என்றோம்.

”அங்க சிறுத்தபுலி நடமாடுச்சுல்ல..” சாதாரணமா சொல்லுச்சு ஒரு அக்கா.. சட்டென ஓடி மறைந்ததாக தாத்தா சொல்லியிருந்ததை உருவப்படுத்தியதில் நான் மிரண்டுப் போனேன். தாத்தா அதை உணராமல் பேசிக் கொண்டிருந்தார். ”அது ஒரு ஆம்பளப் புலி.. இணையறத்துகாக பொம்பளப்புலிய தேடுறப்ப அதோட மூச்சுச்சத்தம் இப்டிதான் கேக்கும்ன்னு அந்தக்கா சொல்லுச்சு..” என்றார்.

”உனக்கு பயமாயில்லையா தாத்தா..” என்றேன்.

”பயந்தா எல்லாத்துக்கும் பயந்துக் கெடக்க வேண்டியதுதுான்.. நாமதான் புலி.. சிங்கம்னு பெரிசுங்களப் பாத்து பயந்துக்கிறோம்.. மானும் மயிலும் கெடைச்சா கறியாக்கிடுறோம்.. ஆனா காட்டுச்சனங்களுக்கு எல்லாம் ஒண்ணுதான்.. சனங்க மிருகங்களை அனுசரிச்சுக்குவாங்க.. மிருகங்க சனங்கள அனுசரிச்சுக்குங்க.. இதுங்க ரெண்டையும் காடு அனுசரிச்சுக்கும்.. காட்டு ஆளுங்கள காட்டுக்குள்ள புழங்க விட்டாத்தானே நாலும் தெரியும்.. ரோடு போடறேன்.. தண்டவாளம் போடறேன்.. சுரங்கம் தோண்டுறேன்னு அவன வெரட்டுனா காடும் அழிஞ்சு அவனும் அழிஞ்சுப் போவான்..காட்டுச்சனங்க கத்தினா கேக்கறது யாரு.. கொரவளையப் புடிச்சுடுறானுங்களே.. மனுசனுங்க காட்டுக்குள்ள பூந்துக்கிட்டு வந்துடுச்சு.. வந்துடுச்சுன்னா.. யாரு என்னா செய்ய முடியும்..“ சாகும் வரை புலம்பிக் கொண்டிருந்தார்.

”நீங்க தங்கச்சி மாப்ளைக்கிட்ட பேசி முடிக்கறதுக்குள்ள அவளுக்கு புள்ளையே பொறந்துடும்..” என்றாள் சலிப்பைப் புலம்பலில் ஏற்றி.

”சரி வுடு.. புள்ளைக்கு சிறுத்தப்புலின்னு பேரு வச்சிடலாம்..” என்றேன் படுத்தவாக்கில் கண்களை மூடிக் கொண்டே.

”எங்கர்ந்துதான் எங்கப்பா உங்கள கண்டுப்புடிச்சாரோ.. எதுக்கெடுத்தாலும் விளையாட்டுதான்.. வயித்துப்புள்ள வர்ற நாளு கடவுளுக்குதான் வெளிச்சம்.. பேசாம வெளியூர்ல எதாவது மண்டபம் புடிச்சு வளைக்காப்பு வச்சுடலாமா..?” என்றாள் ஆர்வமாக.

”அப்ப காட்ட வுட்டுட்டு நாட்டுக்கு போவுணும்ங்கிற..” என்றேன்.

”காடு.. காடு.. காடு.. அந்த சனியன வுட்டுட்டு வெளிய வந்துத் தொலைங்க..” எரிச்சலாக எழுந்துக் கொண்டாள், அத்தனைக் சீக்கிரமாக வந்து விட முடியாது என்பதை உணராமலேயே. காடு எப்போதும் ஏதோ ஒன்றை உணர்த்திக் கொண்டேயிருக்கும். தன்னுள் அடங்கியிருக்கும் உயிர்க்கோளங்கள் வழியாகவும்.. அல்லது அல்லாமலும். இலாபநட்டங்களை முன்னிருத்தும் தேடலில் உணர்தல்கள் நகர்ந்து விடுகின்றன. விருப்புவெறுப்பற்ற வெளிகளை ஊடுருவ விழையும் காட்டை நோக்கியப் பயணத்தில் காடுகள், தான் உணர்த்த வருபவற்றை உணர்த்தி விடுவதாகவே தோன்றுகிறது எனக்கு.

யானையை நேரில் பார்த்த அன்று நான் பிரமித்துத்தான் போனேன். ”எப்பா.. யானை எவ்ளோஒஒ பெருசு.. இவ்ளோஒஒ பெரிய வயித்துக்கு அது எவ்ளோ சாப்புடும் தாத்தா..” என்றேன்.

”மரம்.. செடி.. கொடியெல்லாம் வேரோடு புடுங்கியில்ல சாப்டும்..”

”இப்டிசாப்டா தீர்ந்துப் போயிடாதா..” அத்தனைப் பெரிய உடலுக்கு பொருந்தாத அதன் சிறியக் கண்கள் எனக்கு நினைவிற்கு வந்தது. ஆபத்தற்ற வெளியை அச்சிறு கண்கள் சுட்டும் தைரியத்தில்தான் அதன் தோற்றத்தில் இத்தனைக் கம்பீரமோ என்று தோன்றியது.

”தீர்ந்துதான் போவும்.. தீர்ந்தப்பொறவு அடுத்தக் காட்டுக்கு போயி பசியாறும்.. அதுக்குள்ள இந்தக் காட்டுல அது விட்டுட்டுப் போன மரமெல்லாம் துளுத்து எழுந்திரிச்சிருக்கும்.. திரும்பவும் தீர்ந்துப் போச்சுன்னா அந்தப்பக்கம் போவும்..”

”நடமாடும்போது நம்ப குறுக்க வந்தோம்னா என்ன தாத்தா பண்ணும்..” என் குரல் பயத்தில் மெலிதாகியிருந்தது. அவரை இறுகப் பற்றிக் கொண்டேன். நாம குறுக்கே புகுந்துதான் ரொம்ப நாளாச்சே.. முணுமுணுத்துக் கொண்டார். எங்கள் கிராமம் நோக்கி எப்போதாவது யானைக் கூட்டங்கள் படையெடுப்பதுண்டு. தெரிந்தும் தெரியாமலுமாக முள்வேலி அமைப்பது.. மின்சாரம் பாய்ச்சுவது.. உயரமானப் படலில் அமர்ந்து அதன் வரவை கண்காணித்து வெடி வைத்து விரட்டுவது என வருமுன்னே ஓட்டி விடுவார்கள். “ஆடுன காலும் பாடுன வாயும் நிக்காதுங்கிற நியாயமெல்லாம் மனுசாளுக்கு மட்டுந்தான்“ என்பார் தாத்தா. மான்களோ.. மற்ற சிறு விலங்குகளோ தலைக்காட்டும் தினத்தன்று பிளவுப்பட்ட உறவுகள் கூட ஒன்றுக்கூடும் விருந்து தினமான மாறி விடுவதில் வனத்துறையினருக்கு தகவல்கள் பறப்பதில்லை.

சிறுத்தைப்புலி திறந்துக் கிடந்த மொட்டை மாடிக்கு வருமென்று எனக்கு ஏன் தோன்றாமல் போனது. அதன் மூச்சுக்காற்று நான் அணிந்திருந்த லுங்கியில் அனல் காற்றாக வீசி படபடக்க வைக்கும்போதுதான் அது என்னை மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். மயக்க மருந்து ஊசியில் மயங்கி கூண்டில் பயணப்பட்ட சிறுத்தைப்புலி எப்படி என் முன்னே..? அய்யய்யோ.. படிக்கட்டு வழியே தாவி வீட்டுக்குள் புகுந்து விட்டால்..? மனைவியும் பச்சிளம் குழந்தையும் உறங்குகிறார்களே. பதைத்துப் போனது மனம். இவையேதும் பற்றிய அக்கறையின்றி இறுமாப்பாக அமர்ந்திருந்தது அந்த சிறுத்தைப்புலி. எத்தனைத் தடுப்புகள் போட்டாலும் என்னை என்ன செய்து விட முடியும் என்பது போலிருந்தது அதன் தோற்றம். அதனை நேருக்கு நேராகப் பார்க்கும் போதுதான் அது என் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். அதில் படிந்துக் கிடந்த உணர்வு நிச்சயம் பசிக்கான தேடல் அல்ல. ஏதோ ஒன்றை பேசித் தீர்க்கும் ஆக்ரோஷம் அதில் இருந்தது. உணவுத் தேவைக்காக என்னை அணுகாது என்று நிச்சயமாகத் தெரிந்ததில் நானும் தெளிவானேன். பேரம் பேசத் தொடங்கினேன். அதுவும் அதற்கு தயாராகவே இருந்தது. என் மனைவியையும் மகளையும் அணுகாதிருக்க ஈடாக எதை வைப்பது என்ற முடிவு இன்னும் எங்களுக்குள் எட்டப்படாத விவாதமாகவே நகர்ந்துக் கொண்டிருந்தது.

கவிழ்ந்துப் படுத்திருந்த என்னைப் புரட்டினாள் என் மனைவி. ”யாருமில்லேன்னா கவுந்துக் கெடக்கறது.. ஆள் வந்துட்டா வானத்தை வெறிக்கறது.. என்ன மனுசனோ..” துாக்கம் தழுவியக் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தேன். மனம் இன்னும் விவாதக் களத்திலிருந்து வெளி வரவில்லை. உடலகரீதியான பொதுவெளியிலிருந்து குடும்பரீதியாக ஒருமைப்படுத்தும் மனிதர்களால் கூட சகமனிதனின் எண்ணங்களையோ

[QUOTE="50KG, post: 22861224, member: 558780"] [SIZE=4]பயமா.. என புரியவில்லை என்றாலும் கடந்துப் போனவைகளை விட்டு கண்ணெடுக்க முடியவில்லை. அன்று இரவு கூட என் கனவில் அந்த மயில்களைப் பார்த்தேன். அம்மா.. காட்டுமயிலு எவ்ளோ பெரிசு தெரியுமா.. என்றேன். “காட்டுக்கு போனீயாடா..” என்று பதறினார் அம்மா. ”தாத்தாவுக்கும் பேரனுக்கும் வேற பொழைப்பே கெடையாது..” அப்பா சுலபமாகக் கடந்துப் போனது தந்த சுதந்திரத்தில் எனக்கும் தாத்தாவுக்கும் வீட்டை ஏமாற்ற அதிக சிரமம் இருப்பதில்லை.[/SIZE] [SIZE=4]நிறைவுக் கூட நிரம்பி வழிந்து விடும் சில நேரங்களில். ஒண்டவியலாதபடி நடுக்காட்டில் பெய்ந்து விடும் பெருமழையை விட செந்தட்டியின் முட்கள் அதிகம் படுத்தி விடும். அடங்காத அரிப்பு எரிச்சலைக் கொண்டு வந்து விடுகிறது. வழித்தவறி மாட்டிக் கொண்டத் தருணமொன்று இரவு நேர தரிசனத்தையும் எனக்கு சாத்தியமாக்கியது. பொழியும் நிலவுக்குள் கோட்டோவியமாக வெளிப்படும் காடு வரை எனக்கு பழக்கம்தான். ஆனால் நள்ளிரவுக் காடுகள் சற்றே திகிலுாட்ட வைக்கின்றன.[/SIZE] [SIZE=4]காட்டுவாசிகளின் குடிசையில் இரவு தங்க நேரிட்டபோது நெருப்பு மூட்டத்தில் குளிரையும் பயத்தையும் ஓட்ட முயற்சி செய்தேன். மூட்டப்பட்ட தீயின் ஒளிக்குள் கானகம் முழுவதையும் திணித்துக் கொள்ளத் தோன்றியது. கீறலாகத் தெரிந்த நிலவுக் கூட இருட்டை விரட்ட அஞ்சி மேகத்திற்குள் ஒளிந்துக் கொண்டது. இரவு உணவாக அவர்கள் அளித்த எருமைப்பால் தயிறுடன் கலந்த காட்டுயானம் சோறு உள்ளே இறங்க மறுத்தது. கானகத்து இருட்டை கவ்வித்தள்ளும் முயற்சியில் இரவு முழுவதும் நெருப்புத் தேவையாக இருந்தது… அம்மனிதர்களின் அருகாமையும்தான். மலைவாழையும் ஆகாசக்கருடன் கிழங்கு மாவுமாக வழியனுப்பினார்கள். இந்த மாவு பாம்பு விஷத்தை முறித்து முடக்கி விடும் என்றார் வரும்வழியில் தாத்தா.[/SIZE] [SIZE=4]”நான் ஒருத்தி இருக்கேங்கிற நெனப்பெல்லாம் உங்களுக்கெங்க இருக்கப் போவுது.. காடு.. காடுன்னு.. அதையே கட்டிக்கிட்டு அழுவ வேண்டியதுதானே..? கட்டியவள் அழத் தொடங்க சமாதானப்படுத்தும்விதமாக படுத்தவாறே அவளை அணைத்து இழுத்தேன். என் கனவுகளுக்கு மதிப்பளிக்கிறாளோ இல்லையோ.. நான் தனித்திருக்கும் தருணங்களை அனுமதிக்கும் தன்மைக் கொண்டவள்தான் என் மனைவி. தங்கையைப் பற்றிய கவலை.. ஒரு வாரப் புழுக்கம்.. சிறுத்தைப்புலி விஷயத்தை நான் இத்தனை சுலபமாக எடுத்துக் கொண்டதால் ஏற்பட்ட பகிர்தலற்ற நிலை போன்றவைகள் அவளின் கோபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது.[/SIZE] [SIZE=4]நேற்று அந்த சிறுத்தைப்புலி பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் மேற்புறம் திறந்த குளியலறைக்குள் தஞ்சமடைய யாருக்கு வாழ்வு.. யாருக்கு சாவு என்பது விளங்காமலேயே இறுதியாக மயக்க ஊசி மூலமாக போராட்டம் முடிவுக்கு வந்தது. வனகாவலர்களும் அதிகாரிகளுமாக எடுத்திருந்த குத்தகை நேற்றோடு முடிவுக்கு வந்திருந்தாலும் இறுக்கத்தின் முனை முற்றிலும் அவிழாத நிலையில் அடைப்பட்ட வீடுகள் இன்னும் திறக்கப்பபடவில்லை. வீட்டின் வராண்டா.. மாடிப் படிக்கட்டு என எல்லாமே வலுவான இரும்பு கிராதிக்குள் அகப்பட்டுப் போனதில் குரல்கள் எதிரொலிப்பதான பிரமை எனக்கு. ஏதோ சொன்னாள் அவள். ”என்னப்பா சொன்னே..?” என்றேன்.[/SIZE] [SIZE=4]”எப்பப் பாத்தாலும் கனவுதான்.. அப்டி என்னாதான் வானத்துல கொட்டிக் கெடக்கோ..” என்றாள் அதே கோபத்துடன்.[/SIZE] [SIZE=4]இதைப் போன்றக் கேள்விதான் எனக்கும் தாத்தாவுக்குமிடையே ஊடாடிக் கொண்டிருந்தது.. ”அப்டி காட்ல என்னதான் இருக்கோ..?” பதிலாக என்னையும் தனக்குள் பிணைத்துக் கொண்டது காடு. காடுகளில் வழிந்தோடும் பால் நிலவு பித்தங்கொள்ள வைப்பதாக இருக்கும். புடைப்பாகப் பிணைந்துக் கிடக்கும் வேர்களும் மண்டிக் கிடக்கும் புதர்களும் வழிந்தோடும் நிலவைத் தாங்கித் தனக்குள் பொதித்துக் கொண்டது போல இறுமாந்து நிமிர்ந்திருக்கும். கிளைகளிலும் இலைகளுக்குள்ளும் சிறைப்பிடித்த நிலவை சில மரங்கள் சுயநல மிகுதியில் அடம்பலாக்கி தனக்குள்ளே மறைத்துக் கொள்ளும் சிறிதும் கருணையின்றி. பொழியும் பால் ஒளியை உண்டப்பின் மிகுதிகளை புதர்களுக்குக் கடத்தி அவற்றைக் கோட்டோவியங்களாக்கி விடும் சில நன்மரங்கள். வளைந்து நெளிந்தோடும் மரங்கள் நிழலும் வெள்ளொலியுமாக நிலவைத் தன்னகப்படுத்த நீண்டு நெடிந்த மரங்கள் நிலவுத் தொட்டு விடும் துாரமென்ற தொடர் நம்பிக்கையில் தனது முயற்சியைத் தொடர்ந்துக் கொண்டேயிருந்தன. விட்டக்குறையாக தன்னை தொட்டு விடும் நிலவுக்குள் புல்வெளிகள் முகம் புதைத்து பூரிக்கும். மெல்லிய சாரலும் பனியும், சலசலக்கும் இலைகளை சலனமற்று காட்ட.. மெத்தென்ற புல்வெளிகள் பூச்சிகளுக்கும் பாம்புகளுக்கும் கூட ஏதுவாகதான் இருக்கும்.[/SIZE] [SIZE=4]”தாத்தா.. ஏதாவது மிருகம் வந்துடுச்சுன்னா என்னா செய்வே..?” என்பேன். கேட்கும்போதே தாத்தாவின் விரல்களை அழுத்தமாக இறுக்கிக் கொள்வேன். ”அதுங்களுக்கும் நம்பள வுட்டா யாருதான் இருக்கா..?” என்பார். புரிந்ததுப் போல தலையாட்டிக் கொண்டேன். என்னவென்று கேட்க விழையும் என்னுடைய குறுக்கீடு அவரை எதனுள்ளிருந்தோ நகர்த்தி விடும் என்பதாக தோன்றுவதில் என்னால் கேட்க முடிவதில்லை. புரிந்த சில விஷயங்கள் எனது தோழர்களிடம் பெருமையடித்துக் கொள்ள போதுமானதாக இருக்கும். ஒருமுறை காட்டுவாசி அக்கா ஒருவர் புலியைப் பற்றிச் சொன்னத் தகவல்களை சொந்த சரக்காக்கி அவிழ்த்து விட அதனை நம்பாதத் தோழர்களும் இருக்கவே செய்தனர்.[/SIZE] [SIZE=4]”புலி பொம்பளப்புள்ளங்களாட்டம் வெக்கப்படுமாம்..” புலி பொதுவாக சாந்தமும் வெட்கப்படும் சுபாவமும் உடையது என்று நான் சொல்வதை அவர்கள் நக்கலாக எதிர்க்கொள்வார்கள். நானும் விடுவதில்லை.[/SIZE] [SIZE=4]”ஆமா.. வெக்கப்பட்டு குச்சுக் கட்டிக்கிட்டு ஒக்காந்துக்கும்.. சீரியஸா பேசும்போது கிண்டலடிக்காதீங்கடா..” பதிலில் கோபத்தை ஒளித்துக் கொண்டு தொடர்வேன். ”நீ பசிக்கும்போது சோறு திங்க மாதிரி அதுவும் பசிக்கும் போது சாப்டுது.. எல்லா நேரமுமா பசிக்கும்..? பசியில்லாத நேரத்துல யாரையும் எதுவும் பண்ணாது தெரியுமா.. மனுஷன்னா வயசானக் காலத்தில ஒக்கார வச்சு சோறுப் போடுவோம்.. புலிங்களுக்கு யாரு இருக்கு.. தானா தனக்கு வேணுங்கறத வேட்டையாடிக்குணும்.. முதுமை.. இயலாமை.. யாரும் நம்பளக் கண்டுக்கலையேங்கிற தனிமை உணர்வு எல்லாம் சேரும் போதுதான் அதுங்களுக்கு கோவம் வந்துடுது.. மத்தப்படி அது சாந்தமான மிருகந்தான்.. ஆனா ஒண்ணு மிருகங்கள்ல்ல நல்லது.. கெட்டது.. பழகினது.. பழகாததுன்னு எதுவுமில்ல..” என்றேன்.[/SIZE] [SIZE=4]“நெனப்பு.. உயிரெல்லாம் எங்கயோ இருக்கு.. உருவம் மட்டுந்தான் இங்க இருக்கு..” மனைவியின் புலம்பல் என்னை நடப்புக்குள் இழுத்தது.[/SIZE] [SIZE=4]”சகலைக்கிட்டே நானே பேசி வளைக்காப்புக்கு வேறொரு நாள் பாக்குறேன்.. போதுமா.. நீ கவலய வுடு..” என்றேன்.[/SIZE] [SIZE=4]“என்ன பேசுவீங்க.. சிறுத்தையும் புலியும் வந்தா தடியால அடிச்சு விரட்டிடுலாம்னா..? பாத்திரக்கடைதானே.. எங்க வச்சாலும் ஓடும்.. பேசாம எல்லாருமே வெளியூர்ப்பக்கம் போயீட்டா இந்த பிரச்சனையலெ்லாம் இல்லாம நிம்மதியா இருக்கலாம்ல்ல..” நக்கலா.. கிண்டலா.. கெஞ்சலா.. என்று கணிக்கவியலாதத் தொனியில் பேசினாள் என் மனைவி.[/SIZE] [SIZE=4]”பிரச்சனைக்குள்ளதான்டீ தீர்வும் இருக்கு.. அதான் இயற்கை.. செங்காந்தாள் பூ பாத்திருக்கில்ல.. அழகா.. செவப்பும் மஞ்சளுமா இருக்குமே.. லேடீஸ்ஃபிங்கர் பூன்னு கூட இதுக்கு பேரு வச்சிருக்கலாம்.. பாலீஷ் போட்ட நெயில் மாதிரி அத்தனை அழகு.. ஆனா அதோட கிழங்குல விஷமிருக்கு.. அதுக்காக அதை ஒதுக்கி வச்சிமின்னா நட்டம் நமக்குதான்.. அதைப் பசுமாட்டு கோமியத்துல ஊற வைச்சு அந்த நஞ்ச முறிச்சுட்டோம்னா வலிக்கெல்லாம் நல்ல மருந்துன்னு சித்த மருத்துவம் சொல்லுது..”[/SIZE] [SIZE=4]”போதும்.. ஆரம்பிச்சுடாதீங்க.. நீங்க நிறுத்தறத்துக்குள்ள கீழ கொழந்த எழுந்துக்குவா..” என்றாள். அப்போதுதான் பார்ப்பதுப் போல் அவளைப் பார்த்தேன். நிலவொளி அவளின் அழகைக் கூட்டியிருந்தது. துறுதுறுத்தக் கண்களுக்குள் கடந்த நாட்களின் வருத்தம் பிம்பமாக படிந்திருந்தது. ”கவலைப்படாதடீ..” என்றேன். வாஞ்சையான என் பேச்சை நம்பலாமா.. வேண்டாமா..“ என்பதுப் போல என்னைப் பார்த்துத் திருதிருவென விழித்தாள். திருமணமானப் புதிதில் காடுக் குறித்த எனது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் போதுக் கூட அப்படிதான் விழிப்பாள். பெண்பிள்ளைகளுடன் பிறந்தவனில்லை நான். பெண் தோழிகள் என்றும் யாருமில்லை. இவளைத் தோழியாகவும் வரிந்துக் கொள்ளும் என் மனதின் போக்கிற்கு முடிந்தவரை நியாயம் செய்யும் நல்ல மனைவி இவள். [/SIZE] [SIZE=4]எனக்கும் என் மனைவிக்கும் ஒத்த அலைவரிசைக்குள் பயணிக்க முடிகிறதோ இல்லையோ எனக்கும் தாத்தாவுக்குமான அலைவரிசைகளில் என்றும் குறைப்பாடே இருந்ததில்லை. புதிதுபுதிதான அவரது அனுபவங்கள் என்றுமே அலுப்பதில்லை.[/SIZE] [SIZE=4]”ஒருநாளு நானும் எங்கூட்டாளியும் பொழுது விடியறப்பவே காட்டுக்கு வந்துட்டோம்.. அப்போ காடு எனக்கு புதுசுன்னாலும் அன்னைக்கு ரொம்ப அழகாயிருந்தாப்பல தோணுச்சு. அப்பவே காட்டுக்குள்ள சன நடமாட்டமிருந்துச்சு. அவங்கள்ளாம் இங்கயே வாழறவங்கதான்னு சொன்னான் எங்கூட்டாளி.. சும்மாட்டுத் துணிய இடுப்புல சொருவிக்கிட்டு பொம்பளையாளுங்க வெறவு வெட்ட போயிட்டுருந்தாங்க.. அவங்க போறப்பக்கம் நெறைய எலந்தமரமிருந்துச்சு.. எலந்தப்பழம் பொறுக்கலாம்ன்னு அவங்க பின்னாடியே கௌம்புனோம்..”[/SIZE] [SIZE=4]”அப்றம் என்னாச்சு..”[/SIZE] [SIZE=4]”ஒண்ணும் ஆகல. பட்டுபட்டுன்னு காஞ்சக் குச்சிங்கள ஒடைச்சு வெறவுக்காக கட்டிக்கிட்டாங்க.. எலந்தப்பழம்.. எலுமிச்சம்பழமெல்லாம் பொறுக்கி சாக்குல வச்சுக்கிட்டாங்க… வெறவுக்கட்டை தலயில ஏத்திக்கிட்டு அவங்க கௌம்ப நாங்களும் பின்னாடியே நடந்தோம். போற வழியெல்லாம் வண்ணாத்திப்பூச்சி புடிக்கறது.. மரத்துல நம்பர் போடறது.. செடியில கல்லத் துாக்கிப் வீசறது. ஓணான் அடிக்கிறதுன்னு எதாவது பண்ணிக்கிட்டேப் போனோம்.. திடீர்ன்னு ஏதோமாதிரியான சத்தம்.. காட்டுசனங்க எங்களப் பாத்து சத்தம் போடாதீங்கங்கிற மாதிர வாயில வெரல வச்சுக் காட்டுனாங்க. அப்டியே நின்னோம். எங்களுக்கு எதுவும் தோணல.. சொல்லப்போனா நிதானிக்கக் கூட நேரமில்ல.. நுாறடி துாரமிருக்கும்.. புதர் மறைவுக்குள்ள ஏதோ ஒண்ணு சடக்குன்னு ஓடி மறைஞ்சாப்பல இருந்துச்சு.. அவங்க நடக்க ஆரம்பிச்சாங்க.. மெதுவா எங்களையும் அவங்க பின்னாடியே வரச் சொன்னாங்க.. சின்னச் சின்னதா இருந்துச்சு அவங்க குடிசையெல்லாம். சின்னத்தட்டுல அவிச்சக் கிழங்க வச்சு அதுல ரசத்தை ஊத்திக் கொடுத்தாங்க.. தின்னுப்புட்டு உடனே கௌம்பச் சொன்னாங்க.. பலாப்பழம் பறிக்க போவுணும்னு சொன்னோம்.. ஆனா அவங்க காட்டுக்குள்ள போக வேணாம்னு கன்டிசனா சொன்னாங்க…”[/SIZE] [SIZE=4]முக்கியமாக ஏதோ சொல்லப் போகிறார் என்பதை உணர்ந்து திகிலோடு அவரைப் பார்த்தேன்.[/SIZE] [SIZE=4]”ஏங்க்கா..“? என்றோம்.[/SIZE] [SIZE=4]”அங்க சிறுத்தபுலி நடமாடுச்சுல்ல..” சாதாரணமா சொல்லுச்சு ஒரு அக்கா.. சட்டென ஓடி மறைந்ததாக தாத்தா சொல்லியிருந்ததை உருவப்படுத்தியதில் நான் மிரண்டுப் போனேன். தாத்தா அதை உணராமல் பேசிக் கொண்டிருந்தார். ”அது ஒரு ஆம்பளப் புலி.. இணையறத்துகாக பொம்பளப்புலிய தேடுறப்ப அதோட மூச்சுச்சத்தம் இப்டிதான் கேக்கும்ன்னு அந்தக்கா சொல்லுச்சு..” என்றார்.[/SIZE] [SIZE=4]”உனக்கு பயமாயில்லையா தாத்தா..” என்றேன்.[/SIZE] [SIZE=4]”பயந்தா எல்லாத்துக்கும் பயந்துக் கெடக்க வேண்டியதுதுான்.. நாமதான் புலி.. சிங்கம்னு பெரிசுங்களப் பாத்து பயந்துக்கிறோம்.. மானும் மயிலும் கெடைச்சா கறியாக்கிடுறோம்.. ஆனா காட்டுச்சனங்களுக்கு எல்லாம் ஒண்ணுதான்.. சனங்க மிருகங்களை அனுசரிச்சுக்குவாங்க.. மிருகங்க சனங்கள அனுசரிச்சுக்குங்க.. இதுங்க ரெண்டையும் காடு அனுசரிச்சுக்கும்.. காட்டு ஆளுங்கள காட்டுக்குள்ள புழங்க விட்டாத்தானே நாலும் தெரியும்.. ரோடு போடறேன்.. தண்டவாளம் போடறேன்.. சுரங்கம் தோண்டுறேன்னு அவன வெரட்டுனா காடும் அழிஞ்சு அவனும் அழிஞ்சுப் போவான்..காட்டுச்சனங்க கத்தினா கேக்கறது யாரு.. கொரவளையப் புடிச்சுடுறானுங்களே.. மனுசனுங்க காட்டுக்குள்ள பூந்துக்கிட்டு வந்துடுச்சு.. வந்துடுச்சுன்னா.. யாரு என்னா செய்ய முடியும்..“ சாகும் வரை புலம்பிக் கொண்டிருந்தார்.[/SIZE] [SIZE=4]”நீங்க தங்கச்சி மாப்ளைக்கிட்ட பேசி முடிக்கறதுக்குள்ள அவளுக்கு புள்ளையே பொறந்துடும்..” என்றாள் சலிப்பைப் புலம்பலில் ஏற்றி.[/SIZE] [SIZE=4]”சரி வுடு.. புள்ளைக்கு சிறுத்தப்புலின்னு பேரு வச்சிடலாம்..” என்றேன் படுத்தவாக்கில் கண்களை மூடிக் கொண்டே.[/SIZE] [SIZE=4]”எங்கர்ந்துதான் எங்கப்பா உங்கள கண்டுப்புடிச்சாரோ.. எதுக்கெடுத்தாலும் விளையாட்டுதான்.. வயித்துப்புள்ள வர்ற நாளு கடவுளுக்குதான் வெளிச்சம்.. பேசாம வெளியூர்ல எதாவது மண்டபம் புடிச்சு வளைக்காப்பு வச்சுடலாமா..?” என்றாள் ஆர்வமாக.[/SIZE] [SIZE=4]”அப்ப காட்ட வுட்டுட்டு நாட்டுக்கு போவுணும்ங்கிற..” என்றேன்.[/SIZE] [SIZE=4]”காடு.. காடு.. காடு.. அந்த சனியன வுட்டுட்டு வெளிய வந்துத் தொலைங்க..” எரிச்சலாக எழுந்துக் கொண்டாள், அத்தனைக் சீக்கிரமாக வந்து விட முடியாது என்பதை உணராமலேயே. காடு எப்போதும் ஏதோ ஒன்றை உணர்த்திக் கொண்டேயிருக்கும். தன்னுள் அடங்கியிருக்கும் உயிர்க்கோளங்கள் வழியாகவும்.. அல்லது அல்லாமலும். இலாபநட்டங்களை முன்னிருத்தும் தேடலில் உணர்தல்கள் நகர்ந்து விடுகின்றன. விருப்புவெறுப்பற்ற வெளிகளை ஊடுருவ விழையும் காட்டை நோக்கியப் பயணத்தில் காடுகள், தான் உணர்த்த வருபவற்றை உணர்த்தி விடுவதாகவே தோன்றுகிறது எனக்கு.[/SIZE] [SIZE=4]யானையை நேரில் பார்த்த அன்று நான் பிரமித்துத்தான் போனேன். ”எப்பா.. யானை எவ்ளோஒஒ பெருசு.. இவ்ளோஒஒ பெரிய வயித்துக்கு அது எவ்ளோ சாப்புடும் தாத்தா..” என்றேன்.[/SIZE] [SIZE=4]”மரம்.. செடி.. கொடியெல்லாம் வேரோடு புடுங்கியில்ல சாப்டும்..”[/SIZE] [SIZE=4]”இப்டிசாப்டா தீர்ந்துப் போயிடாதா..” அத்தனைப் பெரிய உடலுக்கு பொருந்தாத அதன் சிறியக் கண்கள் எனக்கு நினைவிற்கு வந்தது. ஆபத்தற்ற வெளியை அச்சிறு கண்கள் சுட்டும் தைரியத்தில்தான் அதன் தோற்றத்தில் இத்தனைக் கம்பீரமோ என்று தோன்றியது.[/SIZE] [SIZE=4]”தீர்ந்துதான் போவும்.. தீர்ந்தப்பொறவு அடுத்தக் காட்டுக்கு போயி பசியாறும்.. அதுக்குள்ள இந்தக் காட்டுல அது விட்டுட்டுப் போன மரமெல்லாம் துளுத்து எழுந்திரிச்சிருக்கும்.. திரும்பவும் தீர்ந்துப் போச்சுன்னா அந்தப்பக்கம் போவும்..”[/SIZE] [SIZE=4]”நடமாடும்போது நம்ப குறுக்க வந்தோம்னா என்ன தாத்தா பண்ணும்..” என் குரல் பயத்தில் மெலிதாகியிருந்தது. அவரை இறுகப் பற்றிக் கொண்டேன். நாம குறுக்கே புகுந்துதான் ரொம்ப நாளாச்சே.. முணுமுணுத்துக் கொண்டார். எங்கள் கிராமம் நோக்கி எப்போதாவது யானைக் கூட்டங்கள் படையெடுப்பதுண்டு. தெரிந்தும் தெரியாமலுமாக முள்வேலி அமைப்பது.. மின்சாரம் பாய்ச்சுவது.. உயரமானப் படலில் அமர்ந்து அதன் வரவை கண்காணித்து வெடி வைத்து விரட்டுவது என வருமுன்னே ஓட்டி விடுவார்கள். “ஆடுன காலும் பாடுன வாயும் நிக்காதுங்கிற நியாயமெல்லாம் மனுசாளுக்கு மட்டுந்தான்“ என்பார் தாத்தா. மான்களோ.. மற்ற சிறு விலங்குகளோ தலைக்காட்டும் தினத்தன்று பிளவுப்பட்ட உறவுகள் கூட ஒன்றுக்கூடும் விருந்து தினமான மாறி விடுவதில் வனத்துறையினருக்கு தகவல்கள் பறப்பதில்லை.[/SIZE] [SIZE=4]சிறுத்தைப்புலி திறந்துக் கிடந்த மொட்டை மாடிக்கு வருமென்று எனக்கு ஏன் தோன்றாமல் போனது. அதன் மூச்சுக்காற்று நான் அணிந்திருந்த லுங்கியில் அனல் காற்றாக வீசி படபடக்க வைக்கும்போதுதான் அது என்னை மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். மயக்க மருந்து ஊசியில் மயங்கி கூண்டில் பயணப்பட்ட சிறுத்தைப்புலி எப்படி என் முன்னே..? அய்யய்யோ.. படிக்கட்டு வழியே தாவி வீட்டுக்குள் புகுந்து விட்டால்..? மனைவியும் பச்சிளம் குழந்தையும் உறங்குகிறார்களே. பதைத்துப் போனது மனம். இவையேதும் பற்றிய அக்கறையின்றி இறுமாப்பாக அமர்ந்திருந்தது அந்த சிறுத்தைப்புலி. எத்தனைத் தடுப்புகள் போட்டாலும் என்னை என்ன செய்து விட முடியும் என்பது போலிருந்தது அதன் தோற்றம். அதனை நேருக்கு நேராகப் பார்க்கும் போதுதான் அது என் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். அதில் படிந்துக் கிடந்த உணர்வு நிச்சயம் பசிக்கான தேடல் அல்ல. ஏதோ ஒன்றை பேசித் தீர்க்கும் ஆக்ரோஷம் அதில் இருந்தது. உணவுத் தேவைக்காக என்னை அணுகாது என்று நிச்சயமாகத் தெரிந்ததில் நானும் தெளிவானேன். பேரம் பேசத் தொடங்கினேன். அதுவும் அதற்கு தயாராகவே இருந்தது. என் மனைவியையும் மகளையும் அணுகாதிருக்க ஈடாக எதை வைப்பது என்ற முடிவு இன்னும் எங்களுக்குள் எட்டப்படாத விவாதமாகவே நகர்ந்துக் கொண்டிருந்தது.[/SIZE] [SIZE=4]கவிழ்ந்துப் படுத்திருந்த என்னைப் புரட்டினாள் என் மனைவி. ”யாருமில்லேன்னா கவுந்துக் கெடக்கறது.. ஆள் வந்துட்டா வானத்தை வெறிக்கறது.. என்ன மனுசனோ..” துாக்கம் தழுவியக் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தேன். மனம் இன்னும் விவாதக் களத்திலிருந்து வெளி வரவில்லை. உடலகரீதியான பொதுவெளியிலிருந்து குடும்பரீதியாக ஒருமைப்படுத்தும் மனிதர்களால் கூட சகமனிதனின் எண்ணங்களையோ[/SIZE][SIZE=4] [/SIZE] [/QUOTE]
Insert quotes…
Verification
Dahaya deken beduwama keeyada?
Post reply
Top
Bottom