Search
Search titles only
By:
Search titles only
By:
Log in
Register
Search
Search titles only
By:
Search titles only
By:
Menu
Install the app
Install
Forums
New posts
All threads
Latest threads
New posts
Trending threads
Trending
Search forums
What's new
New posts
New ads
New profile posts
Latest activity
Free Ads
Latest reviews
Search ads
Members
Current visitors
New profile posts
Search profile posts
Contact us
Latest ads
Ad icon
Jobreceive.com for sale
Blogerwiki
Updated:
Yesterday at 8:55 PM
Post Your Vehicle for Sale — FREE! - https://libro.lk
Kalu_Puth
Updated:
Yesterday at 7:38 PM
ඔයාගෙ Assignment හෝ Thesis එක හරියට හදාගමු
ErMurazor
Updated:
Saturday at 10:52 PM
Ad icon
BlackWall V2ray servers
hu KANNA
Updated:
Sep 23, 2026
Peppa Pig Family Plush Toy Set – 5 Characters
anil1961
Updated:
Sep 19, 2026
Electronics
Vehicles
Property
Search
Reply to thread
Forums
General
ElaKiri Talk!
கலைச்செல்வி
Get the App
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Message

மணங்களை இனம் பிரித்து இன்ன விலங்கு என்று கணித்து விடுவார்கள். துாங்குவதற்கு மர உச்சிகள் கூட போதுமானது அவர்களுக்கு. காடுகளைப்போல.. அதில் வாழும் தாவரங்கள்.. விலங்குகள் போல அவர்களும் புதிரானவர்களாக.. எப்போதும் புதிதானவர்களாகவே தோன்றினார்கள். கிட்டிமுட்டி நகர்ந்தாலும் அவர்களின் உயரம் எட்ட முடியாததாகவே இருந்தது.

ஒருமுறை நீரைத் தேடி ஏரிக்குச் சென்றோம். முப்புறமும் அடர்ந்த மரங்கள் ஏரியை கீற்று நிலவாக ஆக்கிரமித்திருந்திருந்தது. மரங்களற்ற கரை வழியாக ஏரியை அடைந்திருந்தோம். நீரினருகே இருந்ததால் செடிகொடிகள் செழித்திருந்தன. காட்டு மலர்களும் அதன் நறுமணமும் ஏரியைச் சூழ்ந்திருந்தன. பரவிக் கிடந்த வானமும் தொலைவில் தெரியும் மலைத்தொடரும் பனி ஓவியமாக காட்சியளித்தது. மெல்லிளங்காற்று காட்டின் வாசனையை மகரந்தமாக பரப்ப.. சிறுசிறு இடைவெளியை சாதகமாக்கி சூரியன் தலையை நீட்ட.. காட்டுக் கொடிகளில் கொத்துக் கொத்தாக மலர்கள் பூத்துத் தொங்க.. ஈரத்தரை காளான்களை நாய்க்குடைகளாக்கி காட்ட.. உள்ளடங்கிக் கிடந்த இன்ப ஊற்று சரேலென்று பீரிட்டு ஊற்ற.. திக்குமுக்காடிப் போனோம். வெண்கொக்குகள் சாமரம் வீசியதில் கலைந்துப் போன முடிகள் நெற்றிக்கு வந்திருந்தன. வெயில் காலங்களில் கூட அனலில் பொரிந்துக் கிடக்கும் மண்ணும் பெயர் தெரியாத மலர்களின் மணமுமாக காடு என்னை இழுத்துக் கொண்டேயிருக்கும். பள்ளமாகவும் மேடாகவும் செறிவாகவும் வறட்சியாகவும் அடர்வாகவும் அடர்வற்றும் மணற்பாங்காகவும் மண்மேடாகவும் தோன்றும் சமனற்ற காட்டின் நிலப்பரப்பு சலனமற்ற மனவெளிக்குள் சுலபமாக இழுத்துச் சென்று விடும்.

குழந்தை மொட்டை மாடியின் காற்றுக்கு இதமாக துாங்கத் தொடங்கியிருந்தது. ”காட்டுக்குள்ள வாழறது அவங்களுக்கு கஷ்டமாயிருக்காதா..” என்றாள் பேச்சுக் கொடுக்கும்வாக்கில்.

”நகரத்துல வாழறது உனக்கு கஷ்டமாயிருக்கா..” என்றேன் எதிர்க்கேள்வியில் பதிலைச் சொருகி.

”நகரத்துல நிம்மதியாவா வாழ்றோம்..? யானைங்க பண்ற அட்டகாசம் போதாதுன்னு போன வாரம் வந்தது மாதிரி எழவுங்கள்ளாம் வெளிய ஓடி வந்துடுதுங்க.. பயந்து பயந்து சாவறதை விட பேசாம ஒரேடியா போய் சேந்துடலாம்.. அப்பப்பா.. காலம் கலிகாலமாப் போச்சு.. எப்டிதான் மனுசன் வாழ்றதுன்னே தெரியல…”

“அதுங்களும் அப்டிதான் தெகைச்சுப் போயி கெடக்குதுங்க..” என்றேன்.

காடுகள் எந்த வடிவத்துக்குள்ளும் அடங்காமல் முடிவற்று நீளுபவையாக இருந்தன. பொதிந்திருக்கும் விஷயங்களை அவிழ்ப்போர் வரும்வரை பொத்தி வைக்கும் இயல்புக் கொண்டவை. எங்கோ துாரத்தில் மிக சன்னமாக கேட்கும் யானையின் பிளிறல் ஒலியும் படர்ந்து கிடக்கும் சிறுத்தைப்புலியின் கால்தடங்களும் கூட நாட்டை.. நகரத்தை.. அர்த்தமற்ற வெளிக்குள் தள்ளி விடும் ஆற்றல் கொண்டனவாக ஆகின்றன. மூங்கில் காட்டுக்குள் நுழைவதை தாத்தா தடுத்து விடுவார். மூங்கில் படர்ப்புக்குள் யானை நிற்பது தெரியாது என்பார். மூங்கில் புதர் அசைவதுக் கூட யானையின் அசைவுகளை ஒத்ததாகத் தோன்றும் எனக்கு. சிறு ஓடைகள் காட்டும் நீர் பிம்பங்கள் யானையின் துதிக்கையின் நீளலாகவே தெரிந்தது. அனாயாசமாக புகுந்து சலனமற்ற ஓடை நீரை சில்லிப்பாக்கும் காற்றைப் போல காடு சவாதானமாக நமக்குள் நுழைந்து சம்மணமிட்டு அமர்ந்து விடுகிறது. மலைகளில் அடர்ந்து உயர்ந்த மரங்கள் கடல்காற்றைத் தடுத்து மேகமாக்கும் தன் செயலுக்கு தானே மழையாய் பொழிந்து சுய உத்வேகம் பெற்றுக் கொள்ள, மலைத்தரைகள் தன்னுள் விழும் ரகசியங்களை சுனைகளாய்.. ஓடைகளாய்.. அருவியாய்.. நதியாய் வெளிப்படுத்த.. மனம் ஒரு புள்ளியில் கள்வெறிக் கொள்கிறது. திடுமென அதேப் புள்ளியில் அத்தனையும் மறைந்து சூனியத்துக்குள் சஞ்சரிக்கிறது. பின் ஒவ்வொன்றாக முளை விட புள்ளிகள் இணைந்து அடர் கானகமாகிறது. கானகத்துள் நெளியும் பாம்புகளும்.. அட்டைகளும் நேசப்பரப்பிற்குள் நுழைந்து விடுகின்றன. புறவெளியில் புலப்படும் காடு அகவெளிக்குள் உறைந்து விட சஞ்சலமற்ற மனம் சாத்தியமாகி விடுகிறது.

“புள்ளங்க ஸ்கூலுக்கு போக முடியில.. சிறுத்தையப் புடிக்கிறேன்.. புலியப் புடிக்கிறேன்னு வயக்காடெல்லாம் வதமழிஞ்சுக் கெடக்கு..

கடைக்கண்ணிய தெறந்தாதானே தினசரி பொழப்பு ஓடும்.. ஸ்கூல் திறந்தாலும் புள்ளங்கள வெளிய அனுப்ப பயந்து சாவ வேண்டியிருக்கு.. கண்காணிக்க ஆளில்லாம கருப்பங்கொல்லயில யானை பூந்துடுச்சுன்னா மொத்தப் பொழப்புமில்ல கெட்டுப்போயிடும்..” குழந்தையை தன் மடியிலிருந்து என் மடிக்கு மாற்றினாள்.

[QUOTE="50KG, post: 22861229, member: 558780"] [SIZE=4]மணங்களை இனம் பிரித்து இன்ன விலங்கு என்று கணித்து விடுவார்கள். துாங்குவதற்கு மர உச்சிகள் கூட போதுமானது அவர்களுக்கு. காடுகளைப்போல.. அதில் வாழும் தாவரங்கள்.. விலங்குகள் போல அவர்களும் புதிரானவர்களாக.. எப்போதும் புதிதானவர்களாகவே தோன்றினார்கள். கிட்டிமுட்டி நகர்ந்தாலும் அவர்களின் உயரம் எட்ட முடியாததாகவே இருந்தது.[/SIZE] [SIZE=4]ஒருமுறை நீரைத் தேடி ஏரிக்குச் சென்றோம். முப்புறமும் அடர்ந்த மரங்கள் ஏரியை கீற்று நிலவாக ஆக்கிரமித்திருந்திருந்தது. மரங்களற்ற கரை வழியாக ஏரியை அடைந்திருந்தோம். நீரினருகே இருந்ததால் செடிகொடிகள் செழித்திருந்தன. காட்டு மலர்களும் அதன் நறுமணமும் ஏரியைச் சூழ்ந்திருந்தன. பரவிக் கிடந்த வானமும் தொலைவில் தெரியும் மலைத்தொடரும் பனி ஓவியமாக காட்சியளித்தது. மெல்லிளங்காற்று காட்டின் வாசனையை மகரந்தமாக பரப்ப.. சிறுசிறு இடைவெளியை சாதகமாக்கி சூரியன் தலையை நீட்ட.. காட்டுக் கொடிகளில் கொத்துக் கொத்தாக மலர்கள் பூத்துத் தொங்க.. ஈரத்தரை காளான்களை நாய்க்குடைகளாக்கி காட்ட.. உள்ளடங்கிக் கிடந்த இன்ப ஊற்று சரேலென்று பீரிட்டு ஊற்ற.. திக்குமுக்காடிப் போனோம். வெண்கொக்குகள் சாமரம் வீசியதில் கலைந்துப் போன முடிகள் நெற்றிக்கு வந்திருந்தன. வெயில் காலங்களில் கூட அனலில் பொரிந்துக் கிடக்கும் மண்ணும் பெயர் தெரியாத மலர்களின் மணமுமாக காடு என்னை இழுத்துக் கொண்டேயிருக்கும். பள்ளமாகவும் மேடாகவும் செறிவாகவும் வறட்சியாகவும் அடர்வாகவும் அடர்வற்றும் மணற்பாங்காகவும் மண்மேடாகவும் தோன்றும் சமனற்ற காட்டின் நிலப்பரப்பு சலனமற்ற மனவெளிக்குள் சுலபமாக இழுத்துச் சென்று விடும்.[/SIZE] [SIZE=4]குழந்தை மொட்டை மாடியின் காற்றுக்கு இதமாக துாங்கத் தொடங்கியிருந்தது. ”காட்டுக்குள்ள வாழறது அவங்களுக்கு கஷ்டமாயிருக்காதா..” என்றாள் பேச்சுக் கொடுக்கும்வாக்கில்.[/SIZE] [SIZE=4]”நகரத்துல வாழறது உனக்கு கஷ்டமாயிருக்கா..” என்றேன் எதிர்க்கேள்வியில் பதிலைச் சொருகி.[/SIZE] [SIZE=4]”நகரத்துல நிம்மதியாவா வாழ்றோம்..? யானைங்க பண்ற அட்டகாசம் போதாதுன்னு போன வாரம் வந்தது மாதிரி எழவுங்கள்ளாம் வெளிய ஓடி வந்துடுதுங்க.. பயந்து பயந்து சாவறதை விட பேசாம ஒரேடியா போய் சேந்துடலாம்.. அப்பப்பா.. காலம் கலிகாலமாப் போச்சு.. எப்டிதான் மனுசன் வாழ்றதுன்னே தெரியல…”[/SIZE] [SIZE=4]“அதுங்களும் அப்டிதான் தெகைச்சுப் போயி கெடக்குதுங்க..” என்றேன்.[/SIZE] [SIZE=4]காடுகள் எந்த வடிவத்துக்குள்ளும் அடங்காமல் முடிவற்று நீளுபவையாக இருந்தன. பொதிந்திருக்கும் விஷயங்களை அவிழ்ப்போர் வரும்வரை பொத்தி வைக்கும் இயல்புக் கொண்டவை. எங்கோ துாரத்தில் மிக சன்னமாக கேட்கும் யானையின் பிளிறல் ஒலியும் படர்ந்து கிடக்கும் சிறுத்தைப்புலியின் கால்தடங்களும் கூட நாட்டை.. நகரத்தை.. அர்த்தமற்ற வெளிக்குள் தள்ளி விடும் ஆற்றல் கொண்டனவாக ஆகின்றன. மூங்கில் காட்டுக்குள் நுழைவதை தாத்தா தடுத்து விடுவார். மூங்கில் படர்ப்புக்குள் யானை நிற்பது தெரியாது என்பார். மூங்கில் புதர் அசைவதுக் கூட யானையின் அசைவுகளை ஒத்ததாகத் தோன்றும் எனக்கு. சிறு ஓடைகள் காட்டும் நீர் பிம்பங்கள் யானையின் துதிக்கையின் நீளலாகவே தெரிந்தது. அனாயாசமாக புகுந்து சலனமற்ற ஓடை நீரை சில்லிப்பாக்கும் காற்றைப் போல காடு சவாதானமாக நமக்குள் நுழைந்து சம்மணமிட்டு அமர்ந்து விடுகிறது. மலைகளில் அடர்ந்து உயர்ந்த மரங்கள் கடல்காற்றைத் தடுத்து மேகமாக்கும் தன் செயலுக்கு தானே மழையாய் பொழிந்து சுய உத்வேகம் பெற்றுக் கொள்ள, மலைத்தரைகள் தன்னுள் விழும் ரகசியங்களை சுனைகளாய்.. ஓடைகளாய்.. அருவியாய்.. நதியாய் வெளிப்படுத்த.. மனம் ஒரு புள்ளியில் கள்வெறிக் கொள்கிறது. திடுமென அதேப் புள்ளியில் அத்தனையும் மறைந்து சூனியத்துக்குள் சஞ்சரிக்கிறது. பின் ஒவ்வொன்றாக முளை விட புள்ளிகள் இணைந்து அடர் கானகமாகிறது. கானகத்துள் நெளியும் பாம்புகளும்.. அட்டைகளும் நேசப்பரப்பிற்குள் நுழைந்து விடுகின்றன. புறவெளியில் புலப்படும் காடு அகவெளிக்குள் உறைந்து விட சஞ்சலமற்ற மனம் சாத்தியமாகி விடுகிறது.[/SIZE] [SIZE=4]“புள்ளங்க ஸ்கூலுக்கு போக முடியில.. சிறுத்தையப் புடிக்கிறேன்.. புலியப் புடிக்கிறேன்னு வயக்காடெல்லாம் வதமழிஞ்சுக் கெடக்கு.. [/SIZE] [SIZE=4][SIZE=4]கடைக்கண்ணிய தெறந்தாதானே தினசரி பொழப்பு ஓடும்.. ஸ்கூல் திறந்தாலும் புள்ளங்கள வெளிய அனுப்ப பயந்து சாவ வேண்டியிருக்கு.. கண்காணிக்க ஆளில்லாம கருப்பங்கொல்லயில யானை பூந்துடுச்சுன்னா மொத்தப் பொழப்புமில்ல கெட்டுப்போயிடும்..” குழந்தையை தன் மடியிலிருந்து என் மடிக்கு மாற்றினாள்.[/SIZE] [/SIZE] [/QUOTE]
Insert quotes…
Verification
Haya warak paha keeyada? (haya wadi kireema paha)
Post reply
Top
Bottom