தமிழில் இணையதள முகவரிகள்
இணைய தள முகவரிகளை நாம் தற்போது ஆங்கிலத்திலேயே தட்டச்சு செய்து் பெறுகிறோம். சீனா, ஜப்பான் மற்றும் சில நாடுகளில் அவர்கள் மொழிகளிலும் இணைய தள முகவரிகளை அமைத்துப் பயன்படுத்துகின்றனர். இதற்கேற்ற வகையில் இந்த தள முகவரிகளைத் தரும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
நம் மொழியில் அமைக்கும் போது அதனை உணர்ந்து கொண்ட ஒரு புரோகிராம் அந்த முகவரியினை இம்முகவரி தந்த நிறுவனத்தின் சர்வருக்கு அம்மொழி முகவரியினை அனுப்பி அந்த சர்வர் அதனை ஆங்கிலமொழியிலோ அல்லது முகவரிக்கான எண்கள் வடிவிலோ மாற்றி தளத்தைத் தேடும்படி அனுப்பி வைக்கும்.
இந்த முயற்சியினை முன்பு சிங்கப்பூரினைச் சேர்ந்த ஐ.டி.என்.எஸ். டாட் நெட் என்ற நிறுவனம் பிற மொழிகளோடு சேர்த்துத் தமிழுக்கும் தயார் செய்தது. ஆனால் தமிழில் இருந்த பலவகை என்கோடிங் சிஸ்டத்தினால் அம்முயற்சி வெற்றி பெறவில்லை. நம் மக்களிடமும் எடுபடவில்லை.
தற்போது யூனிகோட் என்கோடிங் முறை இருப்பதனால் தமிழில் முகவரி அமைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அநேகமாக தமிழர் திருநாள் பொங்கலன்று இந்த முயற்சி பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What a shame is it 