Assalamu Aleiikum Ramadan!!!

nasam

Well-known member
  • Dec 23, 2009
    3,654
    329
    83
    41
    මහ පාරේ
    أسأل الله أن يعطيك:
    أطيب ما في الدنيا..محبة الله
    وأحسن ما في الجنة..رؤية الله
    وأنفع الكتب..كتاب الله
    وأن يجمعك بأبر الخلق..رسول الله،
    وأن يبلغك رمضان ويبارك لك فيه
    اللهم آمين
     

    nasam

    Well-known member
  • Dec 23, 2009
    3,654
    329
    83
    41
    මහ පාරේ
    ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஹம்ஸா இப்னு அம்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம்,
    'பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?' என்று கேட்டார்.

    அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள்,

    'நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்; நீ விரும்பினால்விட்டுவிடு" என்றார்கள்
     

    nasam

    Well-known member
  • Dec 23, 2009
    3,654
    329
    83
    41
    මහ පාරේ
    நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன்.

    புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (2:267).
    மக்களின் தேவைகளுக்காக ஏதாவது கொடுத்துதவும் போதும் மக்களுக்கு தர்மங்கள் ஸதகாக்கள் செய்யும்போதும் ஹலாலான சமம்பாத்தியங்களிலிருந்து செலவிட வேண்டும். உழைப்பு ஆகுமானதாகவும் தூய்மையானதாகவும் இருத்தல் அவசியமானதாகும். சிறந்த, உயர்தரமான பொருட்களையே மக்களுக்கு வழங்கவேண்டும். தர்மம் செய்கிறோம், இனாமாக வழங்குகிறோம் என்பதற்காக பழுதடைந்த மட்டகரமான மோசமான பொருட்களை வழங்கிடக் கூடாது என அல்லாஹ் தடைவிதிக்கிறான்.


    அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி தர்மம் செய்வதாக இருந்தால் அல்லாஹ் பொருந்திக் கொள்கின்ற பிரகாரமே தர்மம் செய்ய வேண்டும். அல்லாஹ் அங்கீகரிக்காத பொருட்களையோ அல்லது செல்வங்களையோ பகிர்ந்து கொடுப்பதால் நன்மை ஏதும் கிடைத்துவிடப் போவதில்லை.


    ஹராமான வழிகளில் சம்பாதித்து சொத்துக்களை வியாபார பொருட்களை ரமழானில் ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதாலோ அல்லது பள்ளிவாசல்களுக்கு வழங்குவதாலோ நன்மைகள் கிடைக்கப் போவதில்லை.



    “அல்லாஹ் நல்லதை தவிர வேறெதனையும் ஏற்றுக் கொள்வதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி).
    எங்களுக்கு யாராவது எதையாவது கொடுத்தால் அது நல்லதாக தரமானதாக பயன்படுத்துவதற்கு உகந்ததாக இருப்பதையே விரும்புவோம். மட்டகரமானதை தந்தால் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ள மாட்டோம்.



    இதுபோலவே நாம் மற்றவர்களுக்கு கொடுக்கும்போது கூட நல்லதையே கொடுக்க வேண்டும். நாம் விரும்பு வதையே மற்றவர்களுக்கும் விரும்ப வேண்டும்.



    நீங்கள் விரும்புவதை செலவிடாதவரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை செலவிட்டாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறிந்தவன் (3:92).



    மேலே கூறிய 2:267 வசனம் அருளப்பட்டது தொடர்பாக பராஉ பின் ஆஸிப் (ரழி) பின்வருமாறு கூறுகிறார்கள்.



    பேரீச்ச மரத்திலிருந்து பேரீச்சம் கனிகள் பறிக்கும் நாட்களில் அன்சாரித் தோழர்கள் தம் தோட்டங்களிலிருந்து செங்காய் குலைகளைப் பறித்துக கொண்டு வந்து மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலின் இரண்டு தூண்களுக்கிடையே கயிற்றில் கட்டித் தொங்க விடுவார்கள். ஏழை முஹாஜிரீன்கள் அதை எடுத்து உண்பார்கள்.



    ஒரு தடவை ஓர் அன்சாரித் தோழர் அந்த செங்காய் குலைகளுக்கிடையே மட்டமான காய்ந்த பேரீச்சம் குலையைத் தொங்க விட முற்பட்டார். அது அனுமதிக்கப்பட்டதுதான் என அவர் எண்ணிக் கொண்டார். (அது கூடாது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு) அவர் தொடர்பாகவே இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான். (நூல்: இப்னு மாஜா தப்ஸீர் இப்னு கஸீர்).


    மக்களுக்கு வழங்கும்போது நல்லவைகளை வழங்க வேண்டும் என்ற போதனையை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். அதனையே அல்லாஹ் அங்கீகரிக்கிறான்.


    தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் நன்மைதான் எனக் கூறுவீராக. (2:215).


    ரமழான் தரமம் செய்வதற்கான காலம். உண்மையான ஏழை எளியவர்களை அடையாளம் கண்டு துயரங்களை துடைத்துவிடுகின்ற காலம். நபிகளார் (ஸல்) அவர்கள் ரமழானில் வாரி வழங்கும் வள்ளலாக திகழ்ந்தார்கள்.

    எனவே நன்மைகளை பயிர்ச்சைகை செய்யக்கூடியதாக ரமழானை பயன்படுத்துவோம். தன்மானம் காத்து கையேந்தாது வாழும் உண்மையான ஏழைகளை அடையாளம் கண்டு தர்மம் செய்வோம். அந்த தர்மத்தை எமது குடும்பத்திலிருந்து ஆரம்பிப்போம். வீடுவீடாக வீதிவீதியாக சுற்றித்திரியும் மிஸ்கீன்களை பற்றியும் அக்கறை செலுத்துவோம்.


    ரமழான் காலங்களில் தர்மத்தின் சிறப்பையும் செயற்பாடுகளையும் அவதானித்து பல பிச்சைக்கரர்கள் வெளியே வருகிறார்கள். உண்மையில் இவர்கள் பிச்சைக்காரர்களா? அல்லது பிச்சைக்காரர்களாக வேடம் போடுகிறார்களா? ரமழானுக்கு முன்பு இவர்கள் எங்கே போயிருந்தார்கள்?இந்தளவு தொகையினர் பிச்சைக்காரர்களாக மாறியது எப்படி? என்பதிலும் பரிசீலனை செய்வோம்.



    முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் வியாபாரங்கள் செய்யும் இடங்களிலும் அதிகமான பிச்சைக்காரர்கள் காலையிலும் மாலையிலும நடமாடுகிறார்கள். இது பலருக்கு தொல்லையாகவும் மாற்று மத நண்பர்களுக்கு பிரச்சனையாகவும் உருவாகிறது.இஸலாத்தைபற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் தப்பு தப்பாகவே விமர்சனம் செய்கிறார்கள்.நாம் அறிந்த வகையில் முஸ்லிமல்லாத நண்பர்களும் முஸ்லிம்கள் போல் பாவனை செய்து பிச்சைகாரர்களாக வலம் வருகிறாரகள். சிலர் நகர் பகுதிக்கு அண்மையில் -சேரிவாழ் பகுதிகளில்-வாடகைக்கு வீடு எடுத்து பிச்சை எடுக்கிறார்கள். பிச்சகைகாரர்கள் இலட்சாதிபதிகளாக ஆகுவதற்கும் போட்டிபோடுவதுண்டு.


    உண்மையான மிஸ்கீன்களையும் ஏழை எளியவர்களையும் அடையாளம் கண்டு அவர்களின் பிரச்சனைகளை தீரக்க ஒவ்வொரு மஹல்லாவிலும் பள்ளிவாசல் நிர்வாகிகள் நடவடிக்கை எடுப்பது பற்றி சிந்தித்தால் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது கடினமாக இருக்கர்து.


    தர்மங்களும் ஜகாத்களும் பயனுடையதாக ஆகுவதற்கு ஒவ்வொருவரும் சிந்திப்போம்.
     

    nasam

    Well-known member
  • Dec 23, 2009
    3,654
    329
    83
    41
    මහ පාරේ
    38691_1159211318416_1771790050_306284_3966508_n.jpg
     

    nasam

    Well-known member
  • Dec 23, 2009
    3,654
    329
    83
    41
    මහ පාරේ
    ரமழான் கண்ட பத்ர் களம்



    இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த தியாக நிகழ்ச்சியே பத்ர் போராகும். இந்த போர்
    இஸ்லாமிய வரலாற்றில் முதல் போராகும் போதிய முன்னேற்பாடுகள் இல்லாத சுமார் 313 பேர்கள்,
    1000 பேர் கொண்ட யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானிய பலத்தாலும்,
    தியாக குணத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று சிதறடித்த போர் .
    இந்த ‘பத்ர்’ போர் வரலாற்றின் -ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடைபெற்றுள்ளது.
    உண்மையில் இந்த களத்தில் கொள்கைக்காக இரத்த உறவுகள் தமக்குள் மோதிகொண்டது தந்தையும் மகனும் மோதிக்கொண்டனர் ,
    சகோதரர்கள் மோதிக்கொண்டனர், நண்பர்கள் மோதிக்கொண்டனர் இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் கொள்கைக்காக இரத்த உறவுகளை களத்தில் சந்தித்தனர் இரத்த உறவுமுறையை விடவும் அதிக பலம் வாய்ந்தது இஸ்லாமிய கொள்கை என்பதை முஸ்லிம்கள் களத்தில் நீருபித்தனர் இந்த கொள்கை உணர்வினகாரனமாக அதிக எண்ணிக்கை கொண்ட பலமான படையை ஒரு சிறிய படை எதிர்கொண்டது வெற்றிபெற்றது

     

    nasam

    Well-known member
  • Dec 23, 2009
    3,654
    329
    83
    41
    මහ පාරේ
    இஸ்லாம் கூறும் குடும்பவியல் தினந்தோறும் www.onlinepj.com மற்றும் www.tntj.net
    ஆகிய இணையதளங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    நேரம்: இந்தியா: இரவு 10 மணி, அமீரகம் இரவு 8.30 மணி, ஸவுதி இரவு 7.30 மணி


    Ramalan Speech 2010 Live.. (Better)
     
    Last edited:
    • Like
    Reactions: k.s.a

    Dreams001

    Member
    Dec 6, 2008
    15,966
    939
    0
    - ElaKiri Radio -
    இஸ்லாம் கூறும் குடும்பவியல் தினந்தோறும் www.onlinepj.com மற்றும் www.tntj.net
    ஆகிய இணையதளங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    நேரம்: இந்தியா: இரவு 10 மணி, அமீரகம் இரவு 8.30 மணி, ஸவுதி இரவு 7.30 மணி


    நபி (ஸல்) அவர்களிடம் இரவுத்தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், "பஜ்ருடைய்ய சுன்னத் இரண்டு ரகாத்துக்கள் தவிர பதினொரு ரகாதுக்கள், (சில சமயம்) ஒன்பது ரகாதுக்கள், (சில சமயம்) ஏழு ரகாதுக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவார்கள்" என்று விடையளித்தார்கள்

    அறிவிப்பவர் : மஸ்ரூக்

    நூல் : புகாரி 1139


    நோன்பாளியை கண்ணியப்படுத்தல் என்ற பெயரில் இழக்கப்படும் நன்மைகள்:
    “நிச்சயமாக ஒரு நோன்பாளிக்கு முன் உணவருந்தப்பட்டால்,
    அவர் உணவருந்தி முடியும் வரை மலக்குமார்கள் அவர் (நோன்பாளி)
    மீது ஸலவாத்துக் கூறுகின்றார்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    (திர்மிதி-ஸஹீஹ்)


    ரமளானிலும் ரமளான் அல்லாத மாதத்திலும் நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை ? .....

    Buhari 1147 அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
    நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியர்ன ஆயிஷா (ரலி) அவர்களிடம், ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் நபி (ஸல்.........) அவர்க...ளின் தொழுகை எவ்வாறு இருந்தது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமலான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழ மாட்டார்கள்.(முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள்.
    இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் சஜ்தாச் செய்தல்....
    Buhari 1123 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில்) பதினொரு ரக்அத்கள் தொழுவார்கள். அதுவே அவர்களின் (இரவுத்) தொழுகையாக இருந்தது. உங்களில் ஒருவர் சஜ்தாவிலிருந்து......... தலையை ...உயர்த்தாமல் ஐம்பது வசனங்கள் ஓதக் கூடிய நேரம் அத்தொழுகையில் ஒரு சஜ்தாச் செய்வார்கள். ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னால் இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டு (ஃபஜ்ர்) தொழுகைக்காக தம்மை அழைக்க தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) தம்மிடம் வரும் வரை வலப் பக்கம் சாய்ந்து படுத்துக் கொண்டிருப்பார்கள்.
    vis fazal: 700 மடங்கு நன்மை கிடைக்க வேண்டுமானால் எந்தவொரு அமலும் அல்லாஹ்வும் அவனது தூதரினதும் வழிகாட்டலைப் பின்பற்றுவதன் மூலம் மாத்திரமே கிடைக்கும' அது அல்லாத வேறு எதுவும் மார்க்கமாக அல்லஹ்விடத்தில் மார்க்ர்கமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது அ......து நிராகரிக;கப்படும். (முஸ்லிம்)
    அது 1400 வருடங்கள் அல்ல பல்லாயிரம் வருடங்களாக இருந்தாலும் சரியே பார்க்க குர்ஆன் மாயிதா:104


    *******பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்*******

    அஸ்ஸலாமு அழைக்கும்



    ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இலங்கை கிளை ஆகிய இரண்டு ஜமாத்களும் நேற்றிலிருந்து
    (12 /08 /2010 ) கொள்கை ரீதியாக ஒன்றுபட்டு செயல்பட தீர்மானம் மேட்கொள்ளபட்டுள்ளது
    இதன் அடிப்படையில் ரமழானை முன்னிட்டு சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்நிகழ்வில் பெண்களுக்கான இட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது


    காலம் :- 15 - 08 - 2010 (ஞாயிற்றுகிழமை)

    இடம் :- மாபோல (மஸ்ஜிதுல் முத்தகீன் Antennnawatta )

    நேரம் :- அஷர் தொழுகையை தொடர்ந்து


    விசேட ஏற்பாடாக இப்தார் நோன்பு திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது


    மேலதிக விபரங்களுக்கு
    0755 945 885
    0771 524 524
    0777 77 11 41

    Masha Allah! may allah bless us all & accept all our duas.
     
    • Like
    Reactions: k.s.a