இறுதி நாளும் அதன் அடையாளங்களும்!

bonney777

Active member
  • Oct 11, 2008
    374
    26
    28
    இறுதி நாளும் அதன் அடையாளங்களும்!

    [FONT=&quot]இறுதி நாளும் அதன் அடையாளங்களும்![/FONT]

    1-
    [FONT=&quot]அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை. மாறாக[/FONT] [FONT=&quot]அதற்கென முடிவு நாள் வரும். அந்நாளே இறுதி நாளாகும். அதுவே[/FONT] [FONT=&quot]ஐயத்திற்கிடமில்லாத உண்மையுமாகும். அல்லாஹ் சொல்கிறான்:[/FONT]

    [FONT=&quot]நிச்சயமாக[/FONT]
    [FONT=&quot]இறுதிநாள் வந்தே தீரும் அதில் சந்தேகமில்லை.([/FONT]40:59) [FONT=&quot]நிராகரிப்பாளர்கள்[/FONT] [FONT=&quot]இறுதி நாள் எங்களிடம் வருமா[/FONT]? [FONT=&quot]எனக் கேட்கிறார் கள்(நபியே) நீர் கூறும்: ஆம்![/FONT] [FONT=&quot]எம் இறைவனின் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும்.([/FONT]34:3)

    (
    [FONT=&quot]விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்[/FONT]; [FONT=&quot]அதில் சந்தேகமே இல்லை [/FONT]– [FONT=&quot]எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் நம்பிக்கை கொள்ளவில்லை. ([/FONT]54:1)

    [FONT=&quot]மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு (விசாரணை நாள்) நெருங்கிவிட்டது. ஆனால்[/FONT]
    [FONT=&quot]அவர்களோ அதைப் புறக்கணித்து பராமுகமாக இருக்கிறார்கள்.([/FONT]21:1)

    [FONT=&quot]எனினும் அது நெருக்கமாக இருக்கிறதென்பது மனித அறிவால் அறிந்து கொள்ளக்கூடிய[/FONT]
    [FONT=&quot]விஷயமல்ல. அதை அவர்கள் அறிந்து கொள்ளவும் முடியாது. எனினும் அல்லாஹ்வின்[/FONT] [FONT=&quot]விசாலமான அறிவையும் உலகத்தில் கடந்துவிட்ட கால அளவையும் கவனிக்கும்போது[/FONT] [FONT=&quot]மறுமைநாள் சமீபமானது என அறியலாம். மறுமை பற்றிய அறிவு அல்லாஹ் தனக்கே[/FONT] [FONT=&quot]சொந்தமாக்கிக் கொண்ட மறைவான விஷயங்களிலுள்ளதாகும். அவன் இவ்விஷயத்தைத் தனது[/FONT] [FONT=&quot]படைப்புகளில் எவருக்கும் அறிவித்துக் கொடுக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்:[/FONT]

    [FONT=&quot]மக்கள் உம்மிடம் மறுமை நாள் பற்றிக் கேட்கிறார்கள். நிச்சயமாக அது பற்றிய[/FONT]
    [FONT=&quot]அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறதென நீர் கூறுவீராக! அதை நீர் அறிவீரா[/FONT]? [FONT=&quot]அது[/FONT] [FONT=&quot]சமீபமாக வந்துவிடலாம். ([/FONT]33:63)

    [FONT=&quot]நபி(ஸல்) அவர்கள் இறுதி நாள்[/FONT]
    [FONT=&quot]நெருங்கிவிட்டது என்பதை அறிவிக்கக்கூடிய அடையாளங்களைக் கூறியுள்ளார்கள்.[/FONT] [FONT=&quot]அவை: தஜ்ஜால் வருவது இது மக்களுக்கு மிகப் பெரும் குழப்பமாக அமையும்.[/FONT] [FONT=&quot]மக்களில் அதிகமானோர் ஏமாந்து போகுமளவிற்கு சில அற்புதங்களைச் செய்து[/FONT] [FONT=&quot]காட்டுவதற்கு அல்லாஹ் அவனுக்கு சக்தி வழங்குவான். அதாவது வானத்திற்கு[/FONT] [FONT=&quot]உத்தரவு போடுவான். அது மழை பொழியும். புற்பூண்டுகளை முளைவிக்கும்படி[/FONT] [FONT=&quot]பூமிக்கு ஆணையிடுவான். அது அவற்றை முளைவிக்கும். இறந்தவனை உயிர்ப்பிப்பான்.[/FONT] [FONT=&quot]இன்னும் இதுபோன்ற அற்புதங்களைச் செய்வான்.[/FONT]

    [FONT=&quot]அவனைப் பற்றி நபி(ஸல்)[/FONT]
    [FONT=&quot]அவர்கள் கூறினார்கள்: அவன் ஒற்றைக் கண்ணன். சுவர்க்கம் நரகம் போன்றதைக்[/FONT] [FONT=&quot]கொண்டு வருவான். அவன் எதை சுவர்க்கம் என்று கூறுவானோ அது நரகமாகும். அவன்[/FONT] [FONT=&quot]எதை நரகமென்று கூறுவானோ அது சுவர்க்கமாகும். அவன் பூமியில் நாற்பது நாட்கள்[/FONT] [FONT=&quot]இருப்பான். அதில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றும் ஒரு நாள் ஒரு மாதம்[/FONT];; [FONT=&quot]போன்றும் ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதரண நாட்கள்[/FONT] [FONT=&quot]போன்றுமிருக்கும். பூமியில் மக்கா மதீனா வைத்தவிர அவன் நுழையாத இடங்களே[/FONT] [FONT=&quot]இருக்காது.[/FONT]

    [FONT=&quot]மேலும் அதன் அடையாளங்களில் இதுவும் ஒன்றாகும். அதாவது[/FONT]
    [FONT=&quot]சுபுஹுத் தொழுகை நேரத்தில் டமாஸ்கஸின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளை[/FONT] [FONT=&quot]மனாராவிலிருந்து ஈஸா(அலை) அவர்கள் இறங்கி வருவார்கள். அவர்கள் சுபுஹுத்[/FONT] [FONT=&quot]தொழுகையை மக்களுடன் தொழுவார்கள். அதன் பின் தஜ்ஜாலை தேடிச் சென்று கொன்று[/FONT] [FONT=&quot]விடுவார்கள். சூரியன் மேற்கில் உதிப்பதும் இறுதி நாளின் அடையாளமாகும். அதை[/FONT] [FONT=&quot]மக்கள் காணும்போது நடுங்கி ஈமான் கொள்வார்கள். எனினும் அவர்களின் ஈமான்[/FONT] [FONT=&quot]அவர்களுக்குப் பலனளிக்காது. இறுதி நாளுக்கு மேலும் பல அத்தாட்சிகளுள்ளன.[/FONT]
    2-
    [FONT=&quot]இறுதி நாள் பாவிகளின் மீதே ஏற்படும். அதாவது இறுதி நாள் ஏற்படும் முன்[/FONT] [FONT=&quot]முஃமின்களின் உயிர்களைக் கைப்பற்றக்கூடிய தூய்மையான காற்றை அல்லாஹ்[/FONT] [FONT=&quot]அனுப்பிவைப்பான். அதன் பின்னர் அல்லாஹ் எல்லா படைப்பினங்களையும் மரணிக்கச்[/FONT] [FONT=&quot]செய்து இவ்வுலகத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்று நாடினால் சூர்[/FONT] [FONT=&quot]ஊதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட மலக்கிடம் அதில் ஊதும்படி ஏவுவான்.(சூர்[/FONT] [FONT=&quot]என்பது ஒரு பெரும் கொம்பாகும்) மக்கள் அந்த சப்தத்தைக் கேட்டவுடன்[/FONT] [FONT=&quot]மயங்கிவிடுவார்கள். அல்லாஹ் கூறுகிறான்:[/FONT]
    [FONT=&quot]சூர் ஊதப்படும். அப்போது[/FONT]
    [FONT=&quot]அல்லாஹ் நாடியவர்களைத் தவிர வானம் பூமியிலுள்ள அனைவரும்[/FONT] [FONT=&quot]மயங்கிவிடுவார்கள்.([/FONT]39:68) [FONT=&quot]இது வெள்ளிக்கிழமை ஏற்படும். அதன் பின்னர்[/FONT] [FONT=&quot]அனைவரும் மரணித்துவிடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இருக்க[/FONT] [FONT=&quot]மாட்டார்கள்.[/FONT]
    3-
    [FONT=&quot]மனிதனின் உடலனைத்தும் அழிந்துவிடும். மனிதனின்[/FONT] [FONT=&quot]முதுகந்தண்டின் கடைசியிலுள்ள ஒரு சிறு எலும்பைத் தவிர வேறு எல்லாவற்றையும்[/FONT] [FONT=&quot]பூமி தின்றுவிடும். எனினும் நபிமார்களின் உடல்களைப் பூமி தின்னாது. அல்லாஹ்[/FONT] [FONT=&quot]வானிலிருந்து ஒரு தண்ணீரை இறக்கிவைப்பான். (அழிக்கப்பட்ட) உடல்கள்[/FONT] [FONT=&quot]வளர்ந்துவிடும். அல்லாஹ் மக்களை உயிரூட்டி எழுப்ப நாடினால் சூர் ஊதும்[/FONT] [FONT=&quot]பொறுப்பிற்குரிய மலக்கு இஸ்ராஃபீல் அவர்களை உயிர்ப்பிப்பான். அவர் இரண்டாம்[/FONT] [FONT=&quot]முறை சூர் ஊதுவார். அல்லாஹ் எல்லாப் படைப்புகளையும் உயிர்ப்பிப்பான்.[/FONT] [FONT=&quot]மக்கள் தம் மண்ணறைகளிலிருந்து அல்லாஹ் அவர்களை ஆரம்பமாக படைத்தது போன்று[/FONT] [FONT=&quot]செருப்பு அணியாதவர்களாக நிர்வாணிகளாக விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக[/FONT] [FONT=&quot]வெளிவருவார்கள். அல்லாஹ் சொல்கிறான்:[/FONT]
    [FONT=&quot]சூர் ஊதப்படும் அந்நேரம் அவர்கள் மண்ணறையிலிருந்து அவர்களின் இறைவனிடம் விரைந்து வருவார்கள். ([/FONT]36:51)


    [FONT=&quot]அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) கற்களின் பால் விரைந்து[/FONT]
    [FONT=&quot]செல்பவர்களைப்போல் அந்நாளில் கபுருகளிலிருந்து வெளியேறுவார்கள். அவர்களின்[/FONT] [FONT=&quot]பார்வை கீழ்நோக்கி இருக்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் அந்நாள்[/FONT] [FONT=&quot]தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்த நாளாகும். ([/FONT]70:43-44)

    82-1
    [FONT=&quot]வானம் பிளந்து விடும்போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-[/FONT] [FONT=&quot]கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது[/FONT], [FONT=&quot]கப்றுகள் திறக்கப்படும்[/FONT] [FONT=&quot]போது[/FONT], [FONT=&quot]ஒவ்வோர் ஆத்மாவும்[/FONT], [FONT=&quot]அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது[/FONT], [FONT=&quot]எதைப்[/FONT] [FONT=&quot]பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும். ([/FONT]82:1-5)

    [FONT=&quot]இதன்[/FONT]
    [FONT=&quot]பின் மக்கள் மஹ்ஷர் மைதானத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். அது பரந்த[/FONT] [FONT=&quot]விசாலமான பூமியாகும். காஃபிர்கள் முகம் குப்புற கொண்டு வரப்படுவார்கள்.[/FONT] [FONT=&quot]எப்படி அவர்கள் முகம் குப்புற கொண்டு வரப்படுவர்கள்[/FONT]? [FONT=&quot]என நபி(ஸல்)[/FONT] [FONT=&quot]அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்களைப் பாதங்களால் நடக்க வைத்தவன்[/FONT] [FONT=&quot]அவர்களை முகம் குப்புறவும் நடக்க வைக்க சக்தி உள்ளவன் என்று நபி(ஸல்)[/FONT] [FONT=&quot]அவர்கள் கூறினார்கள்.[/FONT]

    [FONT=&quot]அல்லாஹ்வின் நல்லுரையை[/FONT];
    [FONT=&quot]புறக்கணித்து[/FONT] [FONT=&quot]நடந்தவன் மறுமையில் குருடனாக எழுப்பப்படுவான். அந்நாளில் சூரியன் மக்களை[/FONT] [FONT=&quot]நெருங்கியிருக்கும். அப்போது மனிதர்கள் அவரவர்களின் செயல்கள் அளவிற்கு[/FONT] [FONT=&quot]வேர்வையிலிருப்பார்கள். சிலருக்கு கணுக்கால் வரை வேர்வை இருக்கும்.[/FONT] [FONT=&quot]சிலருக்கு இடுப்பளவு இருக்கும். இன்னும் சிலர் முழுக்க வேர்வையில்[/FONT] [FONT=&quot]மூழ்கிவிடுவார்கள்.[/FONT]

    [FONT=&quot]அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத[/FONT]
    [FONT=&quot]அந்நாளில் அவனின் நிழலின் கீழ் சிலர் நிழல் கொடுக்கப்படுவார்கள். அங்கு[/FONT] [FONT=&quot]இருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் நிழலைத் தவிர[/FONT] [FONT=&quot]வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் ஏழு நபர்களுக்கு நிழல் கொடுப்பான்.[/FONT] [FONT=&quot]நீதமாக நடந்து கொண்ட ஆட்சியாளன் அல்லாஹ்வின் வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்[/FONT] [FONT=&quot]தனது உள்ளத்தைப் பள்ளியுடன்[/FONT]; [FONT=&quot]தொடர்பு படுத்திக் கொண்டிருந்த மனிதன்[/FONT] [FONT=&quot]அல்லாஹ்வுக்காக நேசம் கொண்டு அதற்காகவே இணைந்து அதற்காகவே பிரிந்த இரு[/FONT] [FONT=&quot]மனிதர்கள் அந்தஸ்தும் அழகுமுள்ள பெண் தவறு செய்ய அழைத்தபோது நிச்சயமாக நான்[/FONT] [FONT=&quot]அல்லாஹ்வைப் பயப்படுகிறேன் எனக் கூறிய மனிதன் வலது கை கொடுப்பதை இடது கை[/FONT] [FONT=&quot]அறியாவண்ணம் தர்மம் செய்யும் மனிதன் தனித்திருந்து அல்லாஹ்வை நினைவு[/FONT] [FONT=&quot]கூர்ந்து கண்ணீர் வடித்த மனிதன். இது ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும்[/FONT] [FONT=&quot]தான். அவர்களும் தம் செயல்கள் குறித்து விசாரிக்கப்படுவார்கள். அவர்களின்[/FONT] [FONT=&quot]செயல்கள் நல்லவையாகயிருந்தால் நன்மையும் தீயவையாக இருந்தால் தீமையும்[/FONT] [FONT=&quot]உண்டு. கேள்வி கணக்கும் கூலியும் தண்டனையும் ஆண்களுக்கு இருப்பது போலவே[/FONT] [FONT=&quot]பெண்களுக்கும் உண்டு.[/FONT]

    [FONT=&quot]அந்நாளில் மக்கள் கடினமான[/FONT]
    [FONT=&quot]தாகத்திலிருப்பார்கள். அன்றைய ஒரு நாள்(நம் கணக்குப் படி) ஐம்பதாயிரம்[/FONT] [FONT=&quot]ஆண்டுகளுக்குச் சமமாகும். எனினும் முஃமினுக்கு ஒரு தொழுகையை நிறைவேற்றும்[/FONT] [FONT=&quot]அளவுக்கு அந்நேரம் கழிந்துவிடும். முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்களின்[/FONT] [FONT=&quot]தண்ணீர்த் தடாகத்திற்கு வந்து தண்ணீர் அருந்துவார்கள். தண்ணீர்த்[/FONT] [FONT=&quot]தடாகமென்பது நமது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் கொடுத்த[/FONT] [FONT=&quot]மிகப்பெரும் மரியாதையாகும். மறுமை நாளில் நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்தினர்[/FONT] [FONT=&quot]இதில் நீர் அருந்துவார்கள். அதன் தண்ணீர் பாலை விட மிக வெண்மையானதாகவும்[/FONT] [FONT=&quot]தேனைவிட மிகச் சுவையானத கவும்[/FONT]; [FONT=&quot]கற்பூர மணத்தை விட மிக நறுமண[/FONT] [FONT=&quot]முள்ளதாகவுமிருக்கும். அதன் பாத்திரங்கள் வானின் நட்சத்திரங்கள் அளவு[/FONT] [FONT=&quot]இருக்கும். அதில் ஒரு முறை நீர் அருந்தியவன் அதன் பின் ஒருபோதும் தாகிக்கவே[/FONT] [FONT=&quot]மாட்டான்.[/FONT]

    [FONT=&quot]மஹ்ஷர் மைதானத்தில் மக்கள் தங்களிடையே தீர்ப்புச்[/FONT]
    [FONT=&quot]செய்யப்படுவதையும் கேள்வி கணக்குக் கேட்கப்படுவதையும் எதிர்பார்த்தவர்களாக[/FONT] [FONT=&quot]அங்கு நீண்ட நேரமிருப்பார்கள். கடினமான வெப்பத்தில் நிற்பதும்[/FONT] [FONT=&quot]எதிர்பார்ப்பதும் நீண்டு விடுகிறபோது மக்கள் தங்களிடையே தீர்ப்புச்[/FONT] [FONT=&quot]செய்யப்படுவதற்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்பவர்களைத் தேடுவார்கள்.[/FONT] [FONT=&quot]அப்போது ஆதம்(அலை) அவர்களிடம் வருவார்கள். அவர்கள் தம் இயலாமையைக்[/FONT] [FONT=&quot]கூறிவிடுவார்கள். பிறகு முறையே நூஹ்(அலை) இப்றாஹீம் (அலை) மூஸா(அலை)[/FONT] [FONT=&quot]ஈஸா(அலை) என ஒவ்வொரு நபியிடமும் வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தமது[/FONT] [FONT=&quot]இயலாமையைக் கூறிவிடுவார்கள். இறுதியாக முஹம்மது(ஸல்) அவர்களிடம்[/FONT] [FONT=&quot]வருவார்கள். அப்போது அவர்கள் அதற்கு தாமே தகுதியானவர் எனக் கூறி[/FONT] [FONT=&quot]அர்ஷிற்குக் கீழ் சுஜுது செய்வார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உதிக்கச்[/FONT] [FONT=&quot]செய்கின்ற எல்லாப் புகழ் வார்த்தைகளையும் கொண்டு அல்லாஹ்வைப் புகழ்வார்கள்.[/FONT] [FONT=&quot]அப்போது முஹம்மதே! உமது தலையை உயர்த்தும் நீர் கேளும் கொடுக்கப்படுவீர்.[/FONT] [FONT=&quot]பரிந்துரை செய்யும் உமது பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும் எனக் கூறப்படும்.[/FONT] [FONT=&quot]அப்போது அல்லாஹ் தீர்ப்புச் செய்யப்படுவதற்கும் கணக்குக்[/FONT] [FONT=&quot]கேட்கப்படுவதற்கும் அனுமதிவழங்குவான். முஹம்மது(ஸல்) அவர்களின்[/FONT] [FONT=&quot]உம்மத்தினர்தாம் முதன் முதலில் கேள்வி கணக்கு கேட்கப்படுவார்கள்.[/FONT]

    [FONT=&quot]அடியான் செய்த செயல்களில் கேட்கப்படும் முதல் கேள்வி தொழுகை பற்றியாகும்.[/FONT]
    [FONT=&quot]அது சரியாக இருந்து எற்றுக்கொள்ளப்பட்டு விட்டால் ஏனைய செயல்கள்[/FONT] [FONT=&quot]கவனிக்கப்படும்[/FONT];. [FONT=&quot]அது மறுக்கப்பட்டு விட்டால் ஏனைய செயல்களும்[/FONT] [FONT=&quot]மறுக்கப்பட்டு விடும். இதுபோன்றே ஒரு அடியான் ஐந்து காரியங்கள் பற்றி[/FONT] [FONT=&quot]விசாரிக்கப்படுவான். அதாவது அவன் தனது வாழ்நாளை எவ்வாறு கழித்தான் தன்[/FONT] [FONT=&quot]வாலிபத்தை எப்படி பயன்படுத்தினான் தன் பொருளை எப்படி சம்பாதித்து[/FONT] [FONT=&quot]எவ்வழியில் செலவழித்தான் தான் கற்றதில் எந்த அளவுக்கு செயல்படுத்தினான்[/FONT] [FONT=&quot]என்றெல்லாம் விசாரிக்கப்படுவான்.[/FONT]

    [FONT=&quot]மேலும் அடியார்களிடையே[/FONT]
    [FONT=&quot]தீர்ப்புச் செய்யப்படும் முதல் காரியம் இரத்தங்கள் (கொலை[/FONT], [FONT=&quot]காயம்)பற்றிய[/FONT] [FONT=&quot]தீர்ப்பாகும். அந்நாளில் நன்மை தீமைகளைக் கொண்டே நியாயம் வழங்கப்படும். ஒரு[/FONT] [FONT=&quot]மனிதனின் நன்மை எடுக்கப்பட்டு அது அவனால் பாதிக்கப்பட்டவனிடம்[/FONT]; [FONT=&quot]கொடுக்கப்படும். நன்மைகள் தீர்ந்து விட்டால் பாதிக்கப்பட்டவனின்[/FONT]; [FONT=&quot]தீமையை[/FONT] [FONT=&quot]எடுத்து இவனிடம் போடப்படும். அங்கு ஸிராத் என்னும்[/FONT]; [FONT=&quot]பாலம் அமைக்கப்படும்.[/FONT] [FONT=&quot]அது முடியை விட மெல்லிய தாகவும் வாளைவிட கூர்மையானதாகவுமிருக்கும். அது[/FONT] [FONT=&quot]நரகத்தின் மீது அமைக்கடிருக்கும். மக்கள் அதில் அவரவர் செயல்களைப் பொருத்து[/FONT] [FONT=&quot]கடந்து செல்வார்கள். சிலர் கண் சிமிட்டும் நேரத்திற்குள் கடந்து[/FONT] [FONT=&quot]விடுவார்கள். சிலர் காற்று வேகத்தில் செல்வார்கள்[/FONT];. [FONT=&quot]வேறு சிலர் மிக[/FONT] [FONT=&quot]விரைவாகச் செல்லும் குதிரை போன்றும் செல்வார்கள்[/FONT];. [FONT=&quot]இன்னும் தவழ்ந்து[/FONT] [FONT=&quot]தவழ்ந்து செல்பவர்களுமிருப்பார்கள். அப்பாலத்தின் மீது கோர்த்திழுக்கக்[/FONT] [FONT=&quot]கூடிய கொழுத்துச் சங்கிலிகளுமிருக்கும். அது மனிதர்களைப் பிடித்து நரகில்[/FONT] [FONT=&quot]தள்ளிவிடும்.[/FONT]

    [FONT=&quot]காஃபிர்களும் அல்லாஹ் நாடிய பாவிகளான முஃமின்களும்[/FONT]
    [FONT=&quot]நரகில் விழுந்து விடுவார்கள். காஃபிர்கள் நிரந்தரமாக நரகிலேயே[/FONT] [FONT=&quot]இருப்பார்கள். பாவியான முஃமின்கள் அல்லாஹ் நாடிய அளவிற்கு வேதனை[/FONT] [FONT=&quot]செய்யப்பட்டு பின் சுவர்க்கம் செல்வார்கள் நரகம் சென்று விட்ட சிலருக்கு[/FONT] [FONT=&quot]பரிந்துரை செய்வதற்காக நபிமார்கள் ரசூல்மார்கள் நல்லடியார்களில் அல்லாஹ்[/FONT] [FONT=&quot]தான் நாடியவர்களுக்கு பரிந்துரை செய்ய அனுமதி வழங்குவான். இவர்களால்[/FONT] [FONT=&quot]பரிந்துரை செய்யப்படுபவர்களை அல்லாஹ் நரகிலிருந்து வெளியேற்றுவான்.[/FONT]

    [FONT=&quot]இப்பாலத்தை கடந்து சென்ற சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திற்கும்[/FONT]
    [FONT=&quot]நரகத்திற்குமிடையே அமைக்கப்பட்டிருக்கும்[/FONT]; [FONT=&quot]ஒரு பாலத்தில் நிற்பார்கள்.[/FONT] [FONT=&quot]அங்கு அவர்களில் சிலருக்கு சிலரிடமிருந்து கணக்குத் தீர்க்கப்படும். யார்[/FONT] [FONT=&quot]தனது சகோதரனுக்கு அநியாயம் செய்திருக்கிறாரோ அவருக்கு நியாயம்[/FONT] [FONT=&quot]வழங்கப்படாதவரை அல்லது பாதிக்கப்பட்டவர் அவனை திருப்தி கொள்ளாத வரை[/FONT] [FONT=&quot]சுவர்க்கம் செல்ல முடியாது. சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திலும் நரக வாசிகள்[/FONT] [FONT=&quot]நரகத்திலும் நுழைந்து விட்டால் மரணம் ஒரு ஆட்டின் வடிவில் கொண்டு வரப்பட்டு[/FONT] [FONT=&quot]சுவர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே அறுக்கப்படும். சுவர்க்கவாசிகளும்[/FONT] [FONT=&quot]நரகவாசிகளும் அதைப் பார்ப்பார்கள். பிறகு சுவர்க்கவாசிகளே! உங்களுக்கு[/FONT] [FONT=&quot]மரணமே கிடையாது இதிலேயே நீங்கள் நிரந்தரமாக இருங்கள் என கூறப்படும்.[/FONT]

    [FONT=&quot]நரகமும் அதன் வேதனையும்[/FONT]


    [FONT=&quot]அல்லாஹ் கூறுகிறான்: நரகத்தைப் பயந்து கொள்ளுங்கள் அதன் எரிபொருள்[/FONT]
    [FONT=&quot]மனிதர்களும் கற்களுமாகும். அது காஃபிர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.[/FONT] (2:24)

    [FONT=&quot]நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் கூறினார்கள்: நீங்கள்[/FONT]
    [FONT=&quot]எரிக்கும் நெருப்பு நரகின் நெருப்பில் எழுபது மடங்குகளில் ஒன்றாகும்.[/FONT] [FONT=&quot]அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! (பாவிகளைத் தண்டிப்பதற்கு) இதுவே[/FONT] [FONT=&quot]போதுமெனக் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக இதில்[/FONT] [FONT=&quot]அறுபத்தொன்பது மடங்குகள் அதிகமாக்கப்படும். அவையனைத்தும் இது போன்ற[/FONT] [FONT=&quot]வெப்பமுள்ளதாக இருக்கும். எனக் கூறினார்கள். (புகாரி[/FONT], [FONT=&quot]முஸ்லிம்)[/FONT]

    [FONT=&quot]நரகம் ஏழு அடுக்குகளைக் கொண்டதாகும். அதில் ஒவ்வொரு அடுக்கும் மற்றதைவிட[/FONT]
    [FONT=&quot]மிகக் கடுமையான வேதனை உள்ளதாகும். அதில் ஒவ்வொரு அடுக்கிலும் அதற்குத்[/FONT] [FONT=&quot]தகுதியானவர்கள் தத்தமது செயல்களைப் பொறுத்து இருப்பார்கள். நயவஞ்சகர்கள்[/FONT] [FONT=&quot]நரகத்தின் அடித்தட்டிலிருப்பார்கள். அதுதான் மிகக் கடுமையான[/FONT] [FONT=&quot]வேதனைக்குரியதாகும். காஃபிர்களுக்கு நரகத்தில் வேதனை இடைவிடாத நிரந்தர[/FONT] [FONT=&quot]வேதனையாகும். அவர்கள் நரகில் கரிந்துவிடும் போதெல்லாம் வேதனையை[/FONT] [FONT=&quot]அதிகப்படுத்துவதற்காக திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டு வரப்படுவார்கள்.[/FONT]

    [FONT=&quot]அல்லாஹ் கூறுகிறான்: அவர்களின் தோல்கள் கரிந்திடும் போதெல்லாம் அவர்கள்[/FONT]
    [FONT=&quot]வேதனை அனுபவிப்பதற்காக வேறு தோல்களை நாம் ஏற்படுத்துவோம்.([/FONT]4:56) [FONT=&quot]எவர்கள்[/FONT] [FONT=&quot]நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது. அவர்கள் மரணம்[/FONT] [FONT=&quot]அடையும் வகையில் அவர்களுடைய கதை முடிக்கப்படவும் மாட்டாது. நரகத்திலுள்ள[/FONT] [FONT=&quot]வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. இவ்வாறே நாம் எல்லா[/FONT] [FONT=&quot]காஃபிர்களுக்கும் கூலி வழங்குவோம்.([/FONT]35:36)

    [FONT=&quot][/FONT]
     

    bonney777

    Active member
  • Oct 11, 2008
    374
    26
    28
    Cont..

    [FONT=&quot]அதில் அவர்கள்[/FONT] [FONT=&quot]விலங்கிடப்படுவார்கள். அவர்களின் கழுத்துக்களிலும் விலங்கிடப்படும் அல்லாஹ்[/FONT] [FONT=&quot]சொல்கிறான்: இன்னும் அந்நாளில் குற்றவாளிகளைச் சங்கிலிகளால்[/FONT] [FONT=&quot]பிணைக்கப்பட்டவர்களாக அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி[/FONT] [FONT=&quot]இருக்கும்[/FONT]; [FONT=&quot]இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி[/FONT] [FONT=&quot]இருக்கும்.([/FONT]14:49-50)

    [FONT=&quot]நரகவாசிகளின் உணவு ஸக்கூம் என்ற கள்ளி[/FONT]
    [FONT=&quot]மரமாகும். அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக ஸக்கூம்(கள்ளி) மரம் பாவிகளின்[/FONT] [FONT=&quot]உணவாகும். அது உருக்கப்பட்ட செம்பு போன்றிருக்கும். அது வெந்நீர்[/FONT] [FONT=&quot]கொதிப்பதைப் போன்று வயிற்றில் கொதிக்கும்.([/FONT]44:41-46)

    [FONT=&quot]நபி(ஸல்)[/FONT]
    [FONT=&quot]அவர்கள் கூறினார்கள்: ஸக்கூம் மரத்திலிருந்து ஒரு சொட்டு உலகில் விழுந்து[/FONT] [FONT=&quot]விட்டால் உலகிலுள்ளவரின் வாழ்க்கை வீணாகிவிடும். அப்படியானால் அதுவே உணவாக[/FONT] [FONT=&quot]கொடுக்கப்படுபவர்களின் நிலை எப்படி இருக்கும்[/FONT]? ([FONT=&quot]திர்மிதி) நரக வேதனையின்[/FONT] [FONT=&quot]கடுமையையும் சுவர்க்க பாக்கியத்தின் பெருமையையும் பின் வரும் ஹதீஸ்[/FONT] [FONT=&quot]விளக்கிக் காட்டுகிறது: மறுமையில் உலகில் மிகுந்த வசதி வாய்ப்புடன் வாழ்ந்த[/FONT] [FONT=&quot]காஃபிர்களில் ஒருவன் கொண்டு வரப்படுவான். அவனை நரக நெருப்பில் ஒரு முறை[/FONT] [FONT=&quot]முக்கப்படும். பின்னர் அவனிடம் உனக்கு(உலகில்) ஏதேனும் வசதி இருந்ததா[/FONT]? [FONT=&quot]எனக்[/FONT] [FONT=&quot]கேட்கப்படும். அப்போது அவன் எந்தப் பாக்கியமும் எனக்கிருந்ததில்லையே எனக்[/FONT] [FONT=&quot]கூறுவான். ஒரு முறை நரகத்தில் முக்கியதால் உலக பாக்கியங்கள் அனைத்தையும்[/FONT] [FONT=&quot]அவன் மறந்து விடுகிறான். இவ்வாறே உலகில் மிகப்பெரும் கஷ்டத்தில் வாழ்ந்த[/FONT] [FONT=&quot]ஒரு முஃமின் கொண்டு வரப்பட்டு ஒரு முறை சுவர்க்கத்தில் புகுத்தப்படுவான்.[/FONT] [FONT=&quot]பின்னர் (உலகத்தில்) ஏதேனும் உனக்கு கஷ்டமிருந்ததா[/FONT]? [FONT=&quot]எனக் கேட்கப்படுவான்.[/FONT] [FONT=&quot]அதற்கவன் எந்தக் கஷ்டமும் வருமையும் எனக்கிருந்ததில்லையே எனக் கூறுவான்.[/FONT] [FONT=&quot]சுவர்க்கத்தில் ஒரு முறை புகுத்தப்பட்டதால் உலகில் அவன் அனுபவித்த கஷ்டம்[/FONT] [FONT=&quot]வறுமை தூப்பாக்கியம் அனைத்தையும் அவன் மறந்துவிடுவான். (முஸ்லிம்)[/FONT]

    [FONT=&quot]சுவர்க்கம்[/FONT]


    [FONT=&quot]சுவர்க்கம் இறைவனின் நல்லடியார்களுக்குரிய கண்ணியமான நிரந்தரமான வீடாகும்.[/FONT]
    [FONT=&quot]அதிலுள்ள பாக்கியங்கள் எந்தக் கண்ணும் கண்டிராத எந்தக் காதும் கேட்டிராத[/FONT] [FONT=&quot]எந்த மனித உள்ளத்திலும் உதித்திராதவையாகும். அது மனிதன் படித்ததற்கும்[/FONT] [FONT=&quot]கேள்விப்பட்டதற்கும் அப்பாற்பட்டதாகும். அல்லாஹ் கூறுகிறான்: அவர்கள்[/FONT] [FONT=&quot]செய்த(நற்)செயல்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்[/FONT] [FONT=&quot]குளிர்ச்சியை எந்த ஒரு ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.([/FONT]32:17)

    [FONT=&quot]சுவர்க்கத்தின் அந்தஸ்த்துகள் முஃமின்களின் செயல்களைப் பொருத்து ஏற்றத்[/FONT]
    [FONT=&quot]தாழ்வு உடையதாகும். அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்[/FONT] [FONT=&quot]கல்வி வழங்கப்பட்டவர்களுக்கும் அந்தஸ்த்துகளை அல்லாஹ்[/FONT] [FONT=&quot]உயர்த்துகிறான்.([/FONT]58:11)

    [FONT=&quot]சுவர்க்கத்தில் அவர்கள் விரும்பியவற்றை[/FONT]
    [FONT=&quot]உண்ணவும் பருகவும் செய்வார்கள். அவற்றில் நிறம் மாறிவிடாத தண்ணீர் ஆறுகளும்[/FONT] [FONT=&quot]ருசி மாறாத பாலாறுகளும் தெளிவான தேனாறுகளும் சுவையான மதுபான ஆறுகளும்[/FONT] [FONT=&quot]உள்ளன. அவர்களின் மது உலக மது போன்றதல்ல. அல்லாஹ் கூறுகிறான்: தெளிவான[/FONT] [FONT=&quot]பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும் (அது) மிக்க[/FONT] [FONT=&quot]வெண்மையானது அருந்துபவருக்கு மதுரமானது. அதில் கெடுதியுமிராது. அதனால்[/FONT] [FONT=&quot]அவர்கள் புத்தி தடுமாறவும் மாட்டார்கள்.([/FONT]37:45-47)

    [FONT=&quot]சுவர்க்கத்தில்[/FONT]
    [FONT=&quot]ஹுருல் ஈன் பெண்கள் மணமுடித்து வைக்கப்படுவார்கள். நபி(ஸல்) அவர்கள்[/FONT] [FONT=&quot]கூறினார்கள்: [/FONT]”[FONT=&quot]சுவர்க்கத்துப் பெண்களில் ஒரு பெண் உலகத்தாரிடம்[/FONT] [FONT=&quot]வந்துவிட்டால் வானம் பூமிமிக்கிடையே உள்ளவற்றை ஒளிமயமாக்கிவிடுவாள்.[/FONT] [FONT=&quot]அவற்றில் நறுமணத்தை நிரப்பிவிடுவாள்[/FONT]”.([FONT=&quot]புகாரி)[/FONT]

    [FONT=&quot]சுவர்க்கவாசிகளின்[/FONT]
    [FONT=&quot]மிகப்பெரும் பாக்கியம் அவர்கள் அல்லாஹ்வைப் பார்ப்பதாகும். சுவர்க்கவாசிகள்[/FONT] [FONT=&quot]மல ஜலம் கழிக்கவோ மூக்குச் சிந்தவோ உமிழவோ மாட்டார்கள். அவர்களின்[/FONT] [FONT=&quot]சீப்புகள் தங்கமாகவும் வியர்வை கஸ்தூரியாகவுமிருக்கும். அவர்களின்[/FONT] [FONT=&quot]இவ்வருட்பாக்கியம் நின்றுவிடவோ குறைந்திடவோ செய்யாத நிரந்தர பாக்கியமாகும்.[/FONT]

    [FONT=&quot]நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சுவர்க்கம் நுழைகிறாரோ அவர் பாக்கியம்[/FONT]
    [FONT=&quot]பெற்று விட்டார். சிரமப்படவோ சோர்வடையவோ மாட்டார். சுவர்க்கவாசிகளின்[/FONT] [FONT=&quot]குறைந்த பங்கு உலகமனைத்தும் பத்துமுறை வழங்கப்படுவதை விடவும் சிறந்ததாகும்.[/FONT] [FONT=&quot]நரகிலிருந்து வெளியேறி கடைசியில் சுவர்க்கம் நுழைபவன் தான் இக்குறைந்த[/FONT] [FONT=&quot]பங்கை உடையவன்.[/FONT]