எல்லோருக்கும் ஒரே அளவுப் பாதணிகள் பொருந&

அபிவிருத்தியின் போது, அனைவரையும் உள்ளடக்கக் கூடிய அர்ப்பணிப்பு நிறைந்த ஓர் அணுகுமுறை, மக்களின் விசேட தேவைகள், சுதந்திரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளிடையே ஒரு சம நிலையைப் பேணிப் பாதுகாக்க வேண்டியமை இன்றியமையாதவை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றையதினம் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்டச் செயலகத்தின் கருத்தரங்கு மண்டபத்தில்நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு தலைமையுரை நிகழ்த்துகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கென சில விடயங்களும், மத்திய அரசாங்கத்திற்கென சில விடயங்களும், இருவற்றிற்கும் பொதுவான சில விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன் காரணத்தினால் தான் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் கூட்டப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் ஊடாக சட்டத்தால் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனியான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தன் வசப்படுத்த இடமளிக்க முடியாது.
எமது மாகாண மக்கள் மற்றைய மாகாண மக்கள் போலல்ல. அவர்கள் போரின் உக்கிரத்தில் இருந்து விடுபட்டு வந்துள்ளார்கள். அவர்களின் பிரச்சினைகளும் தேவைகளும் விசேடமானதும், தனித்துவமானதுமாகும்.
எல்லோருக்கும் ஒரே அளவுப் பாதணிகள் பொருந்தும் என்று நினைப்பது முறையாகாது என்பதை அன்று ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்துக் காட்டினேன். இன்றும் கூறி வைக்கின்றேன்.
எல்லா மாகாணங்களையும் ஒரேவாறாக நடத்துவோம் என்று அரசாங்கம் கூறுவது கேலிக்கிடமாக அமைகின்றது.
வட கிழக்கு மக்களின் விடிவிற்காகத்தான் 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதனை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப் போய் எமக்குத் தந்துதவப் போன சமச்சீர்மையற்ற அதிகாரப் பகிர்வானது கவனத்திற்கு எடுக்கப்படாமல் போயுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)