பயமா.. என புரியவில்லை என்றாலும் கடந்துப் போனவைகளை விட்டு கண்ணெடுக்க முடியவில்லை. அன்று இரவு கூட என் கனவில் அந்த மயில்களைப் பார்த்தேன். அம்மா.. காட்டுமயிலு எவ்ளோ பெரிசு தெரியுமா.. என்றேன். “காட்டுக்கு போனீயாடா..” என்று பதறினார் அம்மா. ”தாத்தாவுக்கும் பேரனுக்கும் வேற பொழைப்பே கெடையாது..”...